கத்தரியில் இலைப்புள்ளி

கத்தரியில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் முறைகள்:

நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் அடங்கிய மண்ணில், கத்தரியை சாகுபடி செய்யலாம். கோ-1, கோ-2, எம்.டி.யு-1, பி.கே.எம்.-1, பி.எல்.ஆர்-1, கே.கே.எம்-1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.

விதை நேர்த்தி:

கத்தரியை சாகுபடி செய்ய ஏற்ற மாதங்கள் டிசம்பர், ஜனவரி, மே-ஜூன், ஒரு எக்டேருக்கு 400 கிராம் விதைகள் போதுமானது. 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். 400 கிராம் விதைகளுக்கு, 40 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் சிறிது அரிசி கஞ்சியை கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.

இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உயரமான மேட்டு பாத்திகளில் 10 செண்டிமீட்டர் இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளை பரவலாகத் தூவவேண்டும். விதைத்த பின்பு மணலை போட்டு மூடி உடனே நீர் பாய்ச்சவேண்டும்.

நீர் நிர்வாகம்:

நடவு செய்து 3-வது நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 1 லிட்டர் புளுகுளோரலின் என்னும் களைக்கொல்லியினை, 500 லிட்டர் நீரில் நன்கு கலந்து தெளிக்கவேண்டும். பின்னர் நீர் பாய்ச்சி நாற்றுகளை நட வேண்டும். மேலுரமிடுவதற்கு முன்பாக களைக்கொத்தி கொண்டு களைகளை நீக்கவேண்டும்.

நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச் செடிகளின் நுனித்தண்டுகள், இவைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். இவைகளை கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப்புழுக்கள் காணப்படும். இவ்வகை புழுக்கள் காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களை குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித்தண்டினை கிள்ளி எறித்து விடவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட காய்களை பறித்து, அழித்துவிடவேண்டும்.

நூற்புழு தாக்குதல்:

இதனை கட்டுப்படுத்த 3 லிட்டருக்கு 4 கிராம் என்ற அளவில் 50 சதவீத கார்பரில் தூளை கலந்து தெளிக்கவேண்டும். காய்களை தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை குயினால்பாஸ் 2 மில்லியை, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். நடவு செய்த 15 நாட்களுக்கு பின்னர் ஒரு எக்டேருக்கு 15 கிலோ கார்போபியூராணை செடிகளின் வேர்ப்பாகத்தில் இடவேண்டும். நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விதைகளை ட்ரைகோடெர்மா விரிடியை 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேலும் 1 சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போபியூரான் இடுதல் வேண்டும்.

வெள்ளை ஈக்கள்:

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டேருக்கு 12 மஞ்சள் நிற ஒட்டும் பசை தடவிய அட்டை பொறியை வக்க வேண்டும். 1 லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் என்ற அளவில் டைத்தேன் எம் 45 கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம். வாடல் நோயை கட்டுப்படுத்த இந்நோய் தாக்கப்பட்ட செடியை வேருடன் பிடுங்கி எரித்து விடவேண்டும்.

நோய் பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்த மீதைல்டெமட்டான் 2 மில்லியை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்கள் பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். காய்களை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது காம்பின் நீளம் 4-6 செ.மீ இருக்குமாறு அறுவடை செய்ய வேண்டும். மேற்கண்ட முறைகளை பின்பற்றினால் எக்டேருக்கு 150-160 நாட்களில் 25 முதல் 30 டன்கள் மகசூலினை பெறலாம்.

தகவல்: தோட்டக்கலைத்துறை, தஞ்சாவூர்

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

 

June 11, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , ,  · Posted in: கத்திரி

விவசாயிகள் கவனத்திற்கு

காவிரி டெல்டா விவசாயிகள் கவனத்திற்கு

வான் பொய்ப்பினும், தான் பொய்யா காவேரி என புகழப்படும் காவிரி தமிழகத்தின் ஒரே ஜீவ நதியாகும். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு பாசனம் அளிக்கக்கூடியது காவிரி. ஆனால் கர்நாடக அரசின் குறுக்கீட்டால் நீர் வரத்து கேள்விக்குறியாகி வருகின்றது. நீர் வரத்தில் நிரந்தர அளவு கணிக்க இயலாமல் போனதால் ஒவ்வொரு ஆண்டும் அணை திறக்கும் நாளை நீர் இருப்பு, எதிர் பார்க்கும் நீர் வரத்து, பயிர் சாகுபடி பரப்பு, நீர் தேவை அறிந்து நீர் வளங்கள் திட்டத்தை தயாரிக்கவேண்டியுள்ளது.

இப்பணியை வேளாண்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவுற்ற வேளாண் பட்டதாரிகளின் கூட்டமைப்பான தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவையின் தஞ்சை மாவட்ட கிளை செய்துவருகின்றது. இப்பேரவையின் பரிந்துரையை ஏற்று சென்ற ஆண்டில் ஜூன் 6ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அணையின் நீர் இருப்பு, எதிர்பார்க்கப்படும் நீர் வரத்து, நீர் தேவைகளை கவனிக்கும்போது செப்டம்பர் மாதம் முடிய குறைந்தது 160 ஆயிரம் மில்லியன் கனெடி நீர் திறந்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே இருபோக சாகுபடிக்கு ஜூன் 15க்குள் அணையை திறக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே. இந்நிலையில் ஜூன் 15 முதல் ஜூலை 25 முடிய உள்ள காலத்தில் அணை திறக்கப்பட்டால் நன்மையை விட தீமையே அதிகம் விளையும் என்பதால் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் மேட்டூர் அணையை திறந்து ஒரு போக சாகுபடிக்கு உதவலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அணை திறக்கும் மற்றும் மூடும் நாளை முன்கூட்டியே அறிவித்தால் விவசாயிகள் முன் ஏற்பாடு செய்து சாகுபடி செய்திட வசதி செய்திடவும் நீர் வீனாவதை தடுத்திடவும் முடியும். மேலும் அணை மூடும் நாள் அறிவித்து அதற்கு மேல் நீர் திறந்துவிடப்படமாட்டாது என்பதையும் அக்காலத்திற்குள் சாகுபடியை முடித்திடவும் விவசாயிகளுக்கு அறிவித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் மழை ஈரத்தை பயன்படுத்தி எள், மற்றும் பயறுவகைப்பயிர்களை பயிரிடவும் கோடை உழவு செய்திடவும், மண் வளத்தை மேம்படுத்திட பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்திடவும், கடைமடைப்பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்திட வயல்களை தயாரித்திடவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் 1987 ஆம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மேட்டூர் அணை திறந்து இருபதே நாள் தண்ணீர் விடப்பட்ட காலத்தில் கூட ஒரு மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்தவர்கள் என்பதை மனதில் நிறுத்தி இந்த ஆண்டு விவசாயப்பணியை தைரியத்துடன் துவக்கிட வேண்டுகிறோம்.

தகவல்: வ.பழனியப்பன், ஆலோசகர், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 11, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , ,  · Posted in: விவசாயம்

குழு செயல்பாடுகளை கண்காணித்தல்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / குடியிருப்பு அளவிலான மன்றம் / சுய உதவிக் குழு செயல்பாடுகளை கண்காணித்தல்

கண்காணித்தல் :

கூட்டமைப்பு தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக திட்டமிடும் பணிகள் உரிய காலத்தில் பயனுள்ள வகையில் நிறைவேறியுள்ளதா என்பனவற்றை அறிந்து கொண்டு அவ்வப்போது தொடர் நடவடிக்கைகளை செய்து கொள்ளுதலே கண்காணிப்பு ஆகும்.

கடந்த கால கூட்டமைப்புகள், உறுப்பினர் குழுக்களை சரிவர நிர்வகிக்க இயலாத காரணத்தினாலும், தொடர் கண்காணிப்பு, மற்றும் வழிகாட்டுதல் இல்லாமையால் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் கூட்டமைப்பின் பங்கு மிகக் குறைந்தளவே காணப்பட்டது. மேற்கண்ட குறைகளை களைய, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மூலமாக கீழ்க்கண்ட செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

அவை:

1. கண்காணித்தல்
2. வழிகாட்டுதல்
3. செயல்பாடுகளுக்குத் துணைபுரிதல்

கண்காணித்தல்

1. உறுப்பினர் குழுக்கள் முறையான வாரக் கூட்டங்கள் நடத்துவதையும், வார சேமிப்பு செய்வதையும் கண்காணித்தல்
2. பதிவேடுகள் அனைத்தையும் முறையாகப் பராமரிப்பதைக் கண்காணித்தல்
3. குழுக்கள் அவ்வப்போது வங்கிக்குச் சென்று பணம் செலுத்தியபின் செலவுகள் செய்வதைக் கண்காணித்தல்
4. குழுக்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்தல். அதாவது, உள்கடன் வழங்குதல், கடன் திருப்பம், வட்டி வீதம் கணக்கிடுதல், வெளிக்கடன் பெற்று முறையாகச் செலுத்துதல் போன்றவற்றைக் கண்காணித்தல்
5. குழுக்கள் செய்யும் தொழில்கள் / வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களைக் கண்காணித்தல்

வழிகாட்டுதல்:

1. குழுக்களின் கூட்டம் நடத்தும் முறைக்கு வழிகாட்டுதல். (தகவல், நிகழ்ச்சி நிரல், கூட்டத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்றவை.)
2. குழுவின் செயல்பாடுகளில் உறுப்பினர்கள் பங்கேற்பை அளிப்பதற்கு வழிகாட்டுதல்
3. உள்கடன் வழங்கலை முன்னுரிமைப்படுத்துவதற்கும், வட்டி கணக்கிடும் முறைகளுக்கும் வழிகாட்டுதல்
4. உள் தணிக்கை, வெளித் தணிக்கை செய்தல் போன்றவைகளுக்கு வழிகாட்டுதல்
5. குழுக்கள் கூட்டாகத் தொழில்கள் செய்ய வழிகாட்டுதல்
6. குழுக்கள் அவற்றின் விதிமுறைகளிலிருந்து விலகாமல் செல்வதற்கு வழிகாட்டுதல்
7. குழுக்களின் பொதுநிதியை அதிகப்படுத்துவதற்கும் வழிகாட்டுதல்
8. குழுக்களின் சீரான நிதி நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்

செயல்பாடுகளுக்குத் துணைபுரிதல்:

1. உறுப்பினர்கள் சேமிக்கும் பழக்கத்தை மேம்படுத்த (சேமிப்பை அதிகரிக்க) குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு அறிவுரை வழங்குதல்.
2. பதிவேடுகள் பராமரித்தலில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய நடவடிக்கை எடுத்தல்.
3. உள் தணிக்கை மற்றும் வெளித் தணிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களையத் துணைபுரிதல்.
4. விருப்ப சேமிப்பு நிர்ணயிக்கப்பட்ட சேமிப்பு முறைகளை எடுத்துக் கூறி விருப்ப சேமிப்பு செய்யத் துணைபுரிதல்.
5. குழுக்கள் செய்யும் தொழில்களில் தொழில் நுட்பங்கள், தொழில் திறன்கள், மூலப்பொருட்கள் போன்றவை கிடைக்கத் துணை நிற்றல்.
6. குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகள் கிடைத்திட துணைபுரிதல்.
7. கண்காட்சிகள் / பொருட்காட்சிகளில் கலந்து கொண்டு சந்தை வாய்ப்புகளைப் பெற துணை நிற்றல்.

தகவல் மூலம்: தமிழ் நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

தகவல் அனுப்பியவர் : பி தமிழ் இலக்கியா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 5, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: சுய உதவிக் குழு

தக்காளி சாகுபடி

அதிக மகசூல் தரும் தக்காளி சாகுபடி

ஆண்டு மூழுவதும் பயிர் செய்யக்கூடிய தக்காளியை நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம்.  கோ-1,2,3, பி.கே.எம்.1, பூசா ரூபி, பையூர் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.  இதனை பிப்ரவரி,மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். 

விதை நேர்த்தி ஒரு ஹெக்டேருக்கு 350-400 கிராம் விதைகள் போதுமானது.  ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை 40 அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி  செய்யவேண்டும்.  இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ. வரிசை இடைவெளியில் விதைத்து மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.  நிலத்தை நன்கு உழுது பயன்படுத்திவிட்டு 60 செ.மீ, இடைவெளியில் பார்கள் அமைத்து 25 நாள் வயதுடைய நாற்றுகளை பயிரின் ஒரு பக்கத்தில் நடவேண்டும்.  நடுவதற்கு முன்னர் இரண்டு கிலோ அசோஸ் பைரில்லம், நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்துவிட வேண்டும்.  நட்ட  உடன் முதல் தண்ணீரும், பிறகு 3 வது நாள் உயிர் தண்ணீரும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாசனம் செய்யவேண்டும்.  அதற்கு பின்னர் தேவைப்படும் போது நீர் பாய்ச்சினால் போதுமானது. 

உர நிர்வாகம்:

ஒரு ஹெக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பசல்சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட், 50 கிலோ, ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்.  நட்ட 30, வது நாள் தழைச்சத்து 75 இட்டு மண் அணைக்கவேண்டும்.  நாற்று நட்ட 15 நாள் டிரைகான்டினால் 1 மிலி/1 லிட்டர் என்ற அளவில் பூக்கும் தருணத்தி பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்.  இவ்வாறு தெளிப்பதால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.

பின்செய் நேர்த்தி

நாற்று நடுவதற்கு முன்னர் ஒரு புளோகுளோரலின், மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து தெளிக்கவேண்டும்.  பின்னர் நீர் பாய்ச்சி நாற்றுகளை நடவேண்டும்.  நாற்று நட்ட 30நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.  காய்புழு மற்றும் புரோட்டினியா புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறியை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும்.  புழுக்கள் தாக்கப்பட்ட பழங்களையும், வளர்ந்த புழுக்களையும் உடனே அழித்துவிடவேண்டும்.  ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில், 2 மிலி எக்காலக்ஸ் மருந்தை கலந்து தெளிக்கவேண்டும்.  ட்ரைகோடெர்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் இடவேண்டும். 

நாற்று அழுகள் நோய்:   

விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து விதை செய்நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.  நாற்றங்காலில் நீர் தேங்கக்கூடாது.  ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர், ஆக்சிகுளோரைடு கலந்து பாத்திகளில் ஊற்றவேண்டும்.  இலைச்சுருட்டு நச்சுயிரியை  நோயைக் கட்டுப்படுத்த டைமீத்தோவேட் மருந்தினை 2 மில்லி /லிட்டர் என்ற விதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டு.  மேற்கண்ட தொழில்நுட்பமுறைகளை பின்பற்றினால் ஒரு ஹெக்டேருக்கு 35 முதல் 40 டன் பழங்களை மகசூலாகப்பெறலாம்.

தகவல்: தோட்டக்கலைத்துறை, தஞ்சாவூர்.

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 5, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: தக்காளி

கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கீயர் மற்றும் பார்சி வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல்வேண்டும்.  மாணவ, மாணவிகள் இந்த ஆண்டின் இறுதித் தேர்வில் [1 ஆம் வகுப்பு நீங்கலாக] 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13 ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் 2 பேருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.08.2012 ஆகும். கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்பு பட்டிலை உரிய வடிவத்தில் பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

அறிவிப்பு : தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர்

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 5, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: கல்வி உதவித் தொகை

இலவச பயிற்சி

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பற்றிய இலவச பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு பற்றிய இலவச பயிற்சியை வருகிற 6 ந் தேதியிலிருந்து 10 ந் தேதி வரை நடத்த போறாங்க. தஞ்சை மாவட்டத்தில் கிராமபுரத்தை சேர்ந்த 18-35 வயதுவரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்துக்கொள்ளலாம்.   பயிர்சியில் கலந்துக்க விருப்பம் இருக்குறவுங்க மாற்றுச்சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் அவற்றின் நகலுடன் 6 ந்தேதி காலை 9.30 மணிக்கு  தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை ஈஸ்வரி நகரில் உள்ள பக்கிரிசாமி பிள்ளை தெருவில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்திற்கு சென்று நேர்முகதேர்வில் கலந்துக்கொள்ளலாம். இந்த பயிற்சியில் அகர்பத்தி, சம்பிராணி, வாஷிங் பவுடர், மெழுகுவர்த்தி, பினாயில் போன்ற 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும்  [ பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்] என இயக்குநர் திரு. வெற்றிசெல்வன் அவர்கள் தெரிவிக்கிறாங்க.

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 5, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , ,  · Posted in: அறிவிப்புகள்

நுண் கடன்

 1. சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான நிதியினைத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் நுண் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படுகிறது.

நுண் நிதியின் முக்கியத்துவம்

 1. சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை ஊக்கப்படுத்திட
 2. கூட்டமைப்பின் பொதுநிதியினை அதிகரித்திட
 3. உள்கடன் வாய்ப்புகளை அதிகரித்திட
 4. உறுப்பினர்களின் சிறுகடன் / பெருங்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்திட
 5. கூட்டமைப்பில் நிதிகையாளும் திறனை மேம்படுத்தி, முன் உதாரணமாகச் செயல்படுத்திட

நுண் கடன் பெறுவதில் நன்மைகள்:

 1. நுண் நிதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் கடன் திரும்பச் செலுத்தும் அட்டவணையானது மிகவும் குறுகிய கால வரையறைக்குட்பட்டது
 2. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களைத் தவிர நேரிடையாக, நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்
 3. கடன் வழங்கும் முறை மிக எளிதாக இருக்கும்.
 4. கடன் தேவைக்கு அடமானம் ஏதும் தேவையில்லை.
 5. ஒரு சில நிறுவனங்கள் நேரடியாகவே உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது.
 6. அரசுடமையாக்கப்பட்ட வங்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
 7. நுண் நிதி நிறுவனங்கள் நேரிடையாக, சமுதாய சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழு/ கூட்டமைப்புடன் நேரடித் தொடர்பு.
 8. நுண் நிதி மூலம் பெறப்படும் நிதி பெறுவதற்கான நடைமுறைச் செலவினமானது, நிதி பெறுபவருக்கும், நிதி அளிக்கப்படுபவருக்கும் மிகவும் குறைவு.
 9. நுண் நிதி தொடர்பு, ஒரு குழுவை, கூட்டமைப்பினை மட்டும் சார்ந்திருத்தல்

நுண் கடன் மூலம் ஏற்படும் தீமைகள்

 1. சுய உதவிக் குழு / கூட்டமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படாமை
 2. மகளிர் முன்னேற்றத்தினை விட நிதி பரிமாற்றத்திற்கே முக்கியத்துவம் தரப்படும்
 3. அதிகப்படியான வட்டி
 4. கடன் திருப்பிச் செலுத்தும் முறையானது வாரம், 15 தினங்களுக்கு 1 முறை, மாதம் ஒரு முறை சேமிப்பை பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுதல்
 5. மறைமுகமான வட்டி விகிதம் / வட்டி நிர்ணயம் (உணம்) நுழைவுக்கட்டணம், வட்டி காலதாமத்திற்கான அதிக வட்டி, விண்ணப்ப பரிசிலனைக் கட்டணம் மற்றும் இதர
 6. நுண் நிதி மூலம் பெறப்படும் கடன் பெரும்பாலும், கடன் பெறுபவரின் சுய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
 7. சுய உதவிக் குழு / கூட்டமைப்பினை பொருளாதார ரீதியாக, தன்னிறைவு அடையச் செய்வதற்கு முக்கியத்துவம்
 8. நிதிப்பயன்பாட்டினை கண்காணிப்பு செய்வதில் குறைபாடு.

தகவல் மூலம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

தகவல் அனுப்பியவர் : பி தமிழ் இலக்கியா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 2, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: சுய உதவிக் குழு

கேரட் பால்

கேரட் சுவையூட்டப்பட்ட பால் தேவையான பொருள்கள்:

பால் : 10 லிட்டர்
சர்க்கரை : 1.25 கிலோ
ஏலக்காய் : 5 கிராம்
கேரட் : 1 1/2 கிலோ

செய்முறை :

1. பால் பொங்கும் வரை காய்ச்ச வேண்டும்.
2. காய்ச்சும் போது ஏலக்காயை பொடியாக்கி போடவேண்டும்.
3. 10 லிட்டர் பாலுக்கு 5 கிராம் ஏலக்காய் தேவைப்படலாம்.
4. காய்ச்சிய பாலில் 10 லிட்டர் பாலுக்கு 1.25 கிலோ சர்க்கரை போட்டு கலக்கவேண்டும்.
5. காரட் சாறை ஊற்றினால் அற்புதமான நிறம் கிடைக்கும். தேவையான அளவுக்கு ஊற்றிக் கொள்ளலாம். அதிகமாகிவிட்டாலும் கவலையில்லை.
6. பிறகு இதைத் தன்ணீர் வடிகட்டியினால் வடிகட்டவேண்டும்.
7. சூடான பாலை ஒரு தண்ணீர் தொட்டியில் வைத்து ஆறவைக்கவேண்டும்.
8. ஆறும் போது கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்கவேண்டும்.
9. ஆறிய பிறகு பாலித்தீன் கவர்களில் நிரப்பி சீலிங் மெசினில் சீல் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்தபின் விற்பனை செய்யலாம்.
10. 10 லிட்டர் உற்பத்தி செய்ய ரூ.275/- செலவாகும்.
11. 200 மிலி பாக்கெட் ரு.10/- வீதம் விற்பனை செய்யலாம். இதனால் நிகர லாபம் ரூ.225/- கிடைக்கும்.

தகவல்: பால்வள அறிவியல்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்-2.

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 2, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: சிறு தொழில்

இயற்கை உரத் தொழில்நுட்பம்

மண் வளத்தை மேம்படுத்தும் இயற்கை உரத் தொழில்நுட்பம்

மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத்தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

விவசாய நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்வதால், மண் வளம் குன்றிவிடும். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. மண் வளத்தை அதிகபடுத்த சத்துக்களைச் சரியான அளவில் அளிக்க வேண்டும். ரசாயண உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண்ணிலுள்ள நுண்ணியிரிகளையும் மண்புழுக்களையும் அழிக்கின்றன.

நுண்ணுயிரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வளமற்ற மண்ணில், ரசாயன உரங்கள் இடும்போது அவற்றின் முழுப்பயனும் பயிர்களை சென்றடைவதில்லை. இதனால் தான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எவ்வளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினாலும் விளைச்சல் அதிகரிக்காததுடன், இடுபொருட்களுக்கான செலவும் குறைவதில்லை.

மேலும் உயிரற்ற மண்ணில் வேளாண்மை செய்வதால் லாபம் இருக்க முடியாது. மண்ணுக்கும் உயிருண்டு என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.

மண் வளத்தை அளிக்கும் காரணிகள்:

மண்ணில் நுண்ணுயிரிகள் கோடிக்கணக்கில் உள்ளன. மேலும் மண் புழுக்கள், கரையான், மண் வாழ் பூச்சியினங்களும் உள்ளன. இவையே மண்ணின் இயற்கை சூழலைப்பாதுகாக்கின்றன.

இந்த நுண்ணியிரிகள் மிகவும் சுறுசுறுப்பானவை. நாம் மண்ணில் இடும் தொழு உரம், பசுந்தாள் உரம் பண்ணைக்கழிவுகள் மீது செயல்பட்டு, அவற்றை உணவாக பயன்படுத்தி, மக்கச் செய்து மண் வளத்தை பெருக்குகின்றன.

எனவே, மண்ணில் இயற்கையாக மக்கும் பொருள்கள் இல்லையென்றால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறையும். மண்ணில் ஒரு பாக்டீரியா செல்லானது 15 முதல் 20 நிமிஷங்கள் இரண்டாக உடையும். ஒரு நாளில் அவை பல மில்லியன்களாக மாறுகின்றன.

ஆனால், இயற்கை வளங்கள் ஏதுமற்ற நிலையில் பாக்டீரியாக்கள் இறந்து விடும். அல்லது உறக்க நிலைக்கு சென்று விடும். இவை அங்ககப்பொருட்களை மக்கச் செய்து, மண்ணிற்கு அளிப்பதோடு மட்டுமல்லாமல், காற்றிலுள்ள தழைச்சத்தை உள்வாங்கி, மண்ணில் நிலைநிறுத்தி, பயிர்களுக்கு அளிக்கின்றன. எனவே மண் வளத்தை பாதுகாக்க அதிக அளவில் இயற்கை உரங்கள் அதாவது கரிமக் கார்பனை மண்ணில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். மண் இயற்கையாக அதிக கரிம ஊட்டத்தோடு இருந்தால், மண்ணில் இடும் எந்த உரத்தையும் இழப்பில்லாமல் சரியான வகையில் பயிர் பயன்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் வயலிலேயே தயாரிக்கக்கூடிய சில இயற்கை வழி உரங்களை காண்போம்.

பண்ணைக்கழிவுகள் :

அன்றாடம் பண்ணையில் பலவகையான திடக்கழிவுகள் உண்டாக்குகின்றன. இவற்றில் இலைச் சருகுகள், மாட்டுத் தொழுவக்கழிவுகள், பயிர்க்கழிவுகள் மிகுதியாக உள்ளன. அவற்றை நுண்ணுயிர்களின் உதவியால் மட்கச்செய்து பயிர்ச்சத்து நிறைந்த இயற்கை உரமாக மாற்றலாம்.

தொழு உரம்:

கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளை மட்கச்செய்து பயன்படுத்துவது தொழு உரம். மாடுகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 கிலோ சாணத்தையும், 6-7 லிட்டர் சிறுநீரையும் கழிக்கின்றன.

இவ்வாறாக ஓராண்டுக்கு 3.5 டன் சாணமும், 2500 லிட்டர் சிறுநீரும் ஒரு மாட்டிலிருந்து கிடைக்கின்றன. மாட்டின் சாணத்தைவிட சிறுநீரில் தான் தழைச்சத்து 50 சதமும், சாம்பல் சத்து 25 சதமும் அதிகம் உள்ளன. மக்கிய தொழு உரத்தில் ஒவ்வொரு 100 கிலோவிலும் தழைச்சத்து 500 கிராமும், மணிச்சத்து 300 கிராமும், சாம்பல்சத்து 500 கிராமும் உள்ளன.

ஆட்டு எரு:

எந்த இன ஆடும் சராரசியாக நாள் ஒன்றுக்கு 300 கிராம் புழுக்கைகளையும், 200 மிலி சிறுநீரையும் கழிக்கின்றன. ஆட்டு எருவில் 100 கிலோவிற்கு ஒரு கிலோ தழைச்சத்து உள்ளது. தொழு எருவை விட அதிக பயிர்ச்சத்துக்கள் உள்ளன. எனவே ஆட்டுப்பட்டிகளை வயலில் அமைத்து எருவை மண்ணில் சேமிக்கலாம். இந்த ஆட்டுக்கழிவை சாண எரிவாயுக்கலன்களிலும் பயன்படுத்தி, எரி சக்தியோடும் நல்ல இயற்கை உரத்தையும் பெறலாம்.

சாண எரிவாயுக்கழிவு:

சாணத்தை வரட்டியாக தட்டாமால் எரிவாயுக்கலன்களில் பயன்படுத்துவதால் மீத்தேன் வாயு என்ற எரிசக்தி கிடைப்பதுடன் சத்துக்கள் நிறைந்த சாண எரிவாயு கழிவும் கிடைக்கிறது. ஓராண்டு முடிவில் கிடைக்கும் கழிவில் 44.5, 65.9, 28 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட உரம் கிடைக்கின்றன. [3 பசு, 2 கன்றுகள்] இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், காப்பர் போன்ற நுண்ணூட்டங்களும் இதில் உள்ளன.

பயிர்த்தட்டைகள்:

நெல், பயிர்த்தடைகளும் பயிரூட்டச்சத்துக்கள் கொண்டவை. இவற்றை நிலத்தில் உழுதுவிட்டால் அங்ககப்பொருட்களின் அளவு அதிகரிப்பதுமட்டுமல்லாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும். கரும்பு அடிக்கட்டைகளும் வேர்களும், வயல்களில் இருந்து ஹெக்டேருக்கு 13.5 டன் வரை கிடைக்கின்றன. இவற்றை ரோட்டோவேட்டர் கலப்பையைக்கொண்டு பொடி செய்து மண்ணில் கலந்தால் நல்ல கனிம எருவாக மாறுவதோடு ஹெக்டேருக்கு 14 கிலோ தழை, 5 கிலோ மணி மற்றும் 30 கிலோ சாம்பல் சத்தை வயலுக்கு அளிக்கமுடியும்.

மண் புழு மக்கு உரம் :

மண் புழுக்களை பயன்படுத்தி இலை, தழை, கால்நடைக்கழிவுகளை மட்கச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம் பேரூட்டச்சத்துக்கள் மட்டுமல்லாது கரிம பொருட்கள், நுண்ணுயிரிகள், கிரியா ஊக்கிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது நடுநிலையுள்ள அமில, காரத்தனமையைக் கொண்டுள்ளதால், மண்ணில் உள்ள பேரூட்ட, நுண்ணூட்டச்சத்துக்கள் எளிதில் பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

பசுந்தாள் உரங்கள்:

செஸ்பேனியா, கொளுஞ்சி, சணப்பு, பில்லிபெசரா, அகத்தி போன்ற பயிர்களை வளர்த்து, பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும். மேலும் வேம்பு, புங்கம், கிளிசிடியா, எருக்கு இலைகளையும் சாலையோர தரிசு நிலங்களில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளையும் வெட்டி, நிலத்தில் இடுவது பசுந்தால் உரமாகும்.

இதன் மூலம் விழிப்புணர்வைப் பெரும் விவசாயிகள், இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி, மண் வளத்தை காப்பதோடு சுற்றுச்சூழலையும் காத்து, அனைத்து இனங்களுக்கும் நஞ்சில்லா உணவு வழங்க முன் வர வேண்டும்.

தகவல்: பி.எம்.பெருமாள், வேளாண்மை இணை இயக்குநர், புதுக்கோட்டை [தினமணி நாளிதழ், 24, மே, 2012]

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 2, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: உரம்

23.05.2012 முதல் 27.05.2012 வரை

மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை

Agro met Advisory Bulletin regularly posting with the help of India Meteorological Department (IMD) for the Tamil Nadu districts (தமிழ் மற்றும் ஆங்கிலம்).

தமிழகத்தில் உள்ள அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நகப்பட்டிணம், கரூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை,   இராமநதபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தேனி,   சிவகங்கை, மதுரை மற்றும் விழுபுரம்  பகுதிகளுக்கு.

 

அரியலூர் தஞ்சாவூர்
Ariyalur-Tamil / Ariyalur-English Thanjavur -Tamil / Thanjavur-English
திருவாரூர் நகப்பட்டிணம்
Thiruvarur-Tamil / Thiruvarur-English Nagai-Tamil / Nagai-English
கரூர் பெரம்பலூர்
Karur-Tamil / Karur-English Perambalur-Tamil / Perambalur-English
திருச்சி திண்டுக்கல்
Trichy -Tamil / Trichy-English  
புதுக்கோட்டை இராமநதபுரம்
   
சென்னை திருவள்ளூர்
Chennai Thiruvallur
வேலூர் திருவண்ணாமலை
Vellore Thiruvannamalai
கடலூர் விழுபுரம்
Cuddalore Villupuram
காஞ்சிபுரம்  தேனி
Kanchipuram  
 சிவகங்கை  மதுரை
   

May 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: வேளாண் வனிலை அறிக்கை


Powered By Indic IME