வாழை கன்றாக உள்ளபோது அழுகிவிடுகிறது எவ்வாறு சரி செய்வது?

முதலில் அழுகிய வாழை கன்றின் குருத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் முதல் கட்டமாக காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.
பின்னர் டிரைகோடெர்மா விரிடி 1 கிலோகிராம் 50 – 60 குப்பையுடன் கலந்து உரமாக அந்த மரத்திற்கு தரவேண்டும். இவ்வாறு உரம் கொடுக்கும் போது மண்ணில் உள்ள கிருமிகள் செத்துவிடும். மேலும் கீழ்கண்ட உர மேலாண்மை செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: வாழை

பயிர்க்காப்பீட்டு திட்டம்

கரும்பு, வாழை, உளுந்து, கடலை, பயறுக்கு, பாதுகாப்பு
ரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களான கரும்பு, வாழை, உளுந்து, பயறு, கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பயிருக்கு காப்பீடு செய்யப்படும் தொகை, செலுத்தவேண்டிய பிரிமியம், பிரிமியம் செலுத்தவேண்டிய கடைசி நாள் வருமாறு.

பயிர்
காப்பீடு செய்யப்படும் தொகை 
ஏக்கருக்கு ரூ.
பிரிமியம் அளவு செலுத்த வேண்டிய
மொத்த பிரிமியம் ரூ.
கடன் வாங்கும் சிறு/குறு மற்றும் இதர
விவசாயிகள் ரூ.
கடன் வாங்காத சிறு/ குறு
விவசாயிகள் ரூ.
பிரிமியம் செலுத்த கடைசிநாள்
[நடவு அல்லது [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: விவசாயம்

நடவிற்கு கன்றுகள் தேர்வு செய்யும் முறை

வாழையின் பக்கக் கன்றுகளை மண்ணிற்கு கீழே உள்ள கிழங்குடன் தாய் மரத்திலிருந்து பிரித்தெடுத்து கிழங்கின் முழுபாகமும் மண்ணிலும், மீதித் தண்டுப்பாகம் வெளியில் இருக்குமாறும் வைத்து நடவு செய்ய வேண்டும்.
பக்கக் கன்றுகளின் ஈட்டி இலைக்கன்றுகள், நீர்க்கன்றுகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஈட்டி இலைக்கன்றில் அடி பருத்தும், உச்சி சிறுத்தும், இலைகள் குறுகலாகவும் இருக்கும். இதில் கிழங்கு பெரியதாக இருக்கும். ஈட்டி இலைக்கன்றுகள் வீரியமாக வளரும் தன்மை கொண்டதால் அவற்றையே தேர்வு செய்ய வேண்டும்.
பொதுவாக தாய்மரத்திலிருந்து பூ வெளிவந்த [...]

January 13, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: வாழை

இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோயை தடுக்கும் வழிமுறைகள்:
மழை அதிகம் பெய்த நிலையில் ஆங்காங்கே சில பயிர்களில் பூச்சிகளும், நோய் தாக்குதலும் காணப்படுகிறது. நெல், தென்னை, வாழை ஆகியவற்றில் காணப்படும் இதுபோன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் சில
நெல் மழைக்குப்பின் நெல் பயிரில் இலைப்பேண் தாக்குதல் குறைவாக இருக்கும். ஆனால் படைப்புழு மற்றும் கூண்டுப்புழுக்களின் தாக்குதலால் சேதம் அதிகரிக்கும். இதில் படைப்புழுவால், குன்றுகள், காடுகள், வாய்க்கால்களை ஒட்டி அமைந்துள்ள வயல்களுக்கு சேதம் ஏற்படலாம். படைப்புழு பகலில் பதுங்கி இருந்து இரவில் நெற்பயிரை தாக்குகின்றன. [...]

January 9, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: மரவகை

வாழை வாடல் மற்றும் பழ அழுகல் நோய்

வாழைக்கன்று நேர்த்தி:
வாழைக்கன்றில் உள்ள வேர்களை அகற்றி, களி மண் கலவையில் நனைத்த பின்னர் அந்த கிழங்குகளின் மீது 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை தெளித்து நடவேண்டும்.
வயலில் இடுதல்:
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து கன்று விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
தகவல்:முனைவர் க.சித்ரா, உதவிப்பேராசிரியர், [பயிர் நோயியல் துறை], முனைவர். பா.சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் நீர் [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: வாழை

வாழை மற்றும் மாவிற்கு சூடோமோனாஸ்

சூடோமோனாஸ் வாழைத்தாரில் தெளித்தல்:
0.5 சதவீத சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை கடைசி வாழை சிப் வெளிவந்த பின்னர் தெளிக்கவும். இதேபோன்று 30 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யும் வரை தெளிக்கவேண்டும்.
மாம்பழத்தில் ஆனந்த்ரக்னோஸ் / பழ அழுகல் நோய்:
0.5 சதவீத சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை காய் பிடித்து 15 நாட்களுக்கு கழித்து தெளிக்கவும். இதே போன்று
30 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் அறுவடை வரை தெளிக்கவேண்டும்.
தகவல் மூலம் : முனைவர் க.சித்ரா, உதவிப்பேராசிரியர், [பயிர் நோயியல் துறை], முனைவர். பா.சந்திரசேகரன், [...]

January 4, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: பழவகைகள்

கன்று தேர்வு மற்றும் நேர்த்தி

நல்ல மகசூல் தரக்கூடிய தாய்மரத்தின் கிழங்கிலிருந்து வளரும் 2-3 அடி உயரம் கொண்ட 3 மாத வயதுடைய கன்றுகளே சிறந்தவை. இதன் எடை 1.5-2கிலோ ஆகவும், பூச்சி நோய் தாக்காததாகவும் இருக்க வேண்டும். திசுவளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட கன்றுகளையும் பயன்படுத்தலாம். கிழங்கின் அடிப்பாகத்திலுள்ள வேர்களை நீக்கி 0.1சத எமிசான் கரைசலில் 5 நிமிடம் அமிழ்த்தி வைத்து நடவு செய்தால் வாடல் நோயைத் தவிர்க்கலாம்.
நூற்புழு தாக்குதலை தடுக்க சீவிய கன்றுகளை சேற்றுக்குழம்பில் நனைத்து அதன்மேல் 40 கிராம் கார்போபியூரானை [...]

October 21, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: ,  · Posted in: வாழை

வாழையில் பின்செய் நேர்த்தி

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கொத்தி மண் அணைக்க வேண்டும். மாதம் ஒருமுறை பக்கக் கன்றுகளை அகற்ற வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட, காய்ந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். குலைகள் தோன்றி கடைசி சீப்பு வெளிவந்தவுடன் விரியாத பூவை நீக்கிவிட வேண்டும். அதிக எடையின் காரணமாக மரம் சாயாமல் இருக்க பூக்கும் சமயத்தில் முட்டுக் கொடுக்க வேண்டும். இலை விடும் தருவாயில் மறுதாம்புப் பயிருக்கு ஒரு வீரியக்கன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தகவல்: வேளாண்மை செயல் முறைகள்,தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.

October 21, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: ,  · Posted in: வாழை


Powered By Indic IME