கன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு

கன்று ஈன்றபின் பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் முறைகள்

கன்று ஈன்றவுடன் மாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும்.
கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும்.
கன்று ஈனும் சமயத்தில் மடி பெருத்து காணப்படும். இந்த சமயத்தில் மடியில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது வசியமாகும்.
சில மாடுகளில் கன்று ஈனும் சமயத்திற்கு முன்பும் கன்று ஈன்ற பின்பும் மாட்டின் பின்புறம் மற்றும் மடியில் நீர்க்கோர்த்து இருக்கும். இது கன்று ஈன்ற பின்பு [...]

January 12, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: கால்நடை வளர்ப்பு

மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவதற்கு

மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டிய வழிமுறைகள்
கால்நடைகளுக்கு சினைத்தருண அறிகுறி தெரியாமல் இருந்தாலும், சினைப்பருவருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டியவை:

முதல் நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை எடுத்து தோல் நீக்கி உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.
அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு 1 கைப்பிடி முருங்கை இலை கொடுக்கவேண்டும்.
அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி பிரண்டையை அரைத்து பனைவெல்லம் தொட்டு உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.
அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து உள்ளுக்குள் கொடுக்கவேண்டும்.

இப்படி [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பசு

மாட்டின் மேல் அதிமாக ஈ இருக்கிறது? என்ன செய்யலாம்?

(கேள்வி : சேகர், கொளத்தூர், ஆரணி, திருவண்ணாமலை)
சோற்று கற்றாழையின் சோற்றை எடுத்து நன்கு தடவி 1 அல்லது 2 மணி நேரம் கழித்து பின் நீரால் கழுவவும். 2 அல்லது 3 நாட்களை தொடர்ந்து செய்யவும்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி

October 13, 2011 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பசு

மாட்டிற்கு மடிநோய் வந்துள்ளது? அதற்கு என்ன செய்யலாம்?

(ரத்தினம், மேலூர்)
மடிநோய் வருவதற்கு முக்கிய காரணம் அது கட்டுத்துறை சுத்தமாக இல்லாததுதான். சுத்தமின்மை கிருமிகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகின்றது.

கட்டுத்துறை எப்பொழுதும் ஈரமில்லாமல் இருக்க வேண்டும்.
சாணம், மூத்திரம் அடிக்கடி அகற்றப்பட வேண்டும்.
மடி நோய் வந்துள்ள மடியில் வீக்கம் இருந்தால் கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்முன்றையும் மைய அரைத்து வீங்கி உள்ள மடியின் பக்கம் தடவவும்.
பால் கறப்பவர் பால் கறப்பதற்கு முன் தன்னுடைய கையை நன்றாக சோப்பினால் கழுவி சுத்தமாக துடைத்து பின் பால் கறப்பத [...]

October 13, 2011 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பசு

மாட்டை முதுகில் கல்லால் அடித்து வீங்கி உள்ளது? வலி அதிகமாகவும் உள்ளது?

(சீனிவாசன், எம்.ஜி.நகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
வீங்கி உள்ள இடத்தில் “அயோடெக்ஸ்”என்ற களிம்பினை தடவி தவிடு வறுத்து தொடர்ந்து 3-4 நாட்களுக்கு ஒத்தடம் கொடுக்கவும்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி.

October 13, 2011 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பசு


Powered By Indic IME