குரும்பை உதிர்வு

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க 
தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.
காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.
காரணங்கள்:
குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற்செயலில் குறைபாடு, மண்ணின் குணம்( உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச்சது பற்றாக்குறை, நீர் [...]

June 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , ,  · Posted in: தென்னை

கோடையில் தென்னை பராமரிப்பு

கோடையில் தென்னை தோப்பு பராமரிப்பு முறைகள்

இதுவரை வேலி அமைக்காமல் இருந்தால் உயிர்வேலியோ, முள்கம்பி வேலியோ அமைத்து கன்றுகளுக்கு ஆடு மாடுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
சென்ற பருவத்தில் நட்ட தென்னங்கன்றுகட்கு தென்னங்கீற்று அல்லது பனை மட்டைகளைக் கொண்டு கோடையில் நிழல் கொடுக்க வேண்டும்.
பாசனநீர் வசதி உள்ளவர்கள் நேரடியாக வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சலாம். தண்ணீர் வசதி குறைவாக உள்ளவர்கள் சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றி தேவையான நீரை கன்றுகளுக்கு அளிக்கலாம். இதுவும் முடியாதவர்கள் பானைமுறை(Pitcher Pot) மூலம் ஒவ்வொரு கன்றுக்கும் [...]

June 13, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: தென்னை

கோடையில் தென்னை பராமரிப்பு

கோடையில் தென்னை தோப்பு பராமரிப்பு முறைகள்
தோப்பு பராமரிப்பு
பருவமழை துவங்கும்போதும், முடியும் போதும் நடுவில் மழைக்காலத்திலும் தோப்பை நன்கு உழ வேண்டும். கோடைமழை பெய்வதால் இடையழவு செய்யலாம். இடையழவு செய்வதால் மழை நீர் தோப்பிலேயே ஈர்க்கப்படும். வேர்களுக்கு காற்றோட்டம் கிடைத்து நன்கு வளர்ந்து பயிரூட்டங்களையும் தண்ணீரையும் நன்கு எடுத்துக்கொள்ளும். களைகள் நீக்கப்படுகின்றன. தேங்காய் மகசூல் கூடும்.

தோப்பில் பளை,கூராஞ்சி,அடிமட்டை,பன்னாடை,ஓலை மற்றும் குப்பை கூளங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.
ஓலைகளைச் சேகரித்து கீற்று பின்னலாம். கரையான புற்றுக்கள் இருந்தால் அவற்றை [...]

June 13, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: தென்னை

தென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது ஏன்?

2 வயதான தென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது. எவ்வாறு இதனை சரிசெய்வது?
30 – 40 கிராம் குருணை மருந்தை சிறிய பாலிதீன் பையில் போட்டு பையில் சிறு சிறு துளைகள் போட்டு மரத்தின் 3வது மட்டையின் இடுக்கில் சொருகிவிட்டால் விசவாயு தாக்கி புழு இறந்து போகும். பின்னர் வேப்பம் பிண்ணாக்கு மரத்தின் அடியில் கொடுத்து வரமரம் நன்றாக வளரும்.
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும்  சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: தென்னை

தென்னை மரத்தின் தூர் உளுத்து கொட்டுகிறது, குரும்பை உதிர்கிறது ஏன்?

5 வயதான தென்னை மரம் 2 மாதமாகத்தான் தூர் உளுத்து கொட்டுகிறது, குரும்பை உதிர்கிறது, மேலும் காய் சிறுத்து கொட்டிவிடுகிறது ஏன்?

தென்னை மரத்தின் தூர் பகுதியில் சிவப்பு கூன்வண்டு சிறு சிறு துளைகள் துளைத்து அதன் வழியாஅனைத்தையும் களிமண் வைத்து பூசவேண்டும், பின்னர் மிச்ச முள்ள அந்த ஒருதுளையின் உள்ளே உள்ள அனைத்தையும் கத்தி வைத்து நன்றாக சுரண்டி எடுத்து விட்டு அதனுள் celphos என்ற மாத்திரையை வாங்கி உள்ளே வைத்து அந்த ஓட்டையையும் களிமண் வைத்து [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: தென்னை

நடவுக்கேற்ற தென்னை

உயிரினங்கள் அனைத்திற்கும் கரு உருவாகி தனது அடுத்த வாரிசு வெளிவர குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. இந்த விதிமுறைகள் உயிரினங்களுக்கு மட்டுமல்ல. தாவரங்களுக்கும் பொருந்தும். தென்னை மரங்களில் பாளை பூ வெடித்து, சூல் முடியில் ஒட்டிய மகரந்தப்பொடி சூல் பைக்குள் சென்று கருசேர்க்கை ஆனதில் இருந்து 12 வது மாதம் நல்ல நெத்து விதை தேங்காய் கிடைக்கும். இது முளைத்துவர மூன்று மாதங்கள் ஆகும். அடுத்த மூன்று இலை வந்த பிறகு தான் நடவுக்கேற்ற தென்னம்பிள்ளையாக மாறுகிறது. ஆக [...]

March 20, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: தென்னை

தென்னை நுனிகுருத்துடன் சாய்ந்துவிட்டது

என்னிம் தென்னந்தோப்பில் 8 வருட தென்னை மரங்கள் 100 உள்ளது, இதில் தற்போது ஒரு மரம் மட்டும் நுனிகுருத்துடன் சாய்ந்துவிட்டது, மரம் கூடுபோல கீழே விழுந்துவிட்டது, மற்ற மரங்களுக்கும் இந்த நோய் வராம இருக்க என்ன செய்வது? [திரு அந்தோணிசாமி, மேலதிருப்பூந்துருத்தி]
இது சிவப்புக்கூண் வண்டின் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு மரத்திற்கு மானோகுரோட்டோபாஸ் 10 மிலி மருந்தை 20 மில்லி தண்ணீரில் கலந்து ஒரு பாலித்தீன் பையில் ஊற்றி வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு தென்னை மரத்தின் கீழ் இளம் [...]

January 13, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை

தென்னை, மல்லிகை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம்

ஜுலை 20,2011 தங்கச்சிமடத்தில் உள்ள ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உச்சிப்புளி தேட்டக்கலை துறை சார்பாக தென்னை, மல்லிகை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உச்சிப்புளி தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு. S. சமுத்திரபாண்டியன் மற்றும் துணை வேளாண் அலுவலர் திரு. K. பழனிச்சாமி, விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்களுக்கான தென்னை நல வாரிய சேவைகள், அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி, உர மேலாண்மை, தென்னை மற்றும் மல்லிகை சாகுபடி முறைகள், பூச்சிக்கட்டுபாடு, ஊடுபயிர் சாகுபடி குறித்து விளக்கமளித்தார்.
அரசு அலுவலர்கள் [...]

January 12, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: நிகழ்ச்சிகள்

போரான் பற்றாக்குறை

தென்னை- கொண்டை வளைதல்/ இலைபிரியாமை
காரணம்: போரான் பற்றாக்குறை
அறிகுறிகள்:

மூன்று வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று வெளிவர இயலாத நிலையில் காணப்படும்.
இலைகளின் வளர்ச்சி மிகவும் குறைந்து மட்டைகள் குருத்து பாகத்தில் இருந்து வளைந்து காணப்படும்.
நிவர்த்தி செய்யும் முறைகள்:
மரத்திற்கு 200gm போராக்ஸ் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு அளிப்பதால் ஓலைகள் நன்றாக பிரிந்து வளர்ச்சியடைகின்றது.
வேர் மூலம் 25ppm அளவு போரான் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகின்றது.

தகவல்: தென்னை ஆராய்ச்சி நிலையம், கொச்சி.
தகவல் அனுப்பியவர் – [...]

January 9, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: தென்னை

தென்னை காப்பீட்டுத்திட்டம்

சென்ற ஆண்டில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டிட தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து தென்னை காப்பீட்டுத்திட்டம் தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது.
இதுவரை நம் மாவட்டத்தில் 202 விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்திட விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 81,700 ரூபாய் பிரிமியமாக செலுத்தியுள்ளனர். இதில் 27 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியுடையவர்களாக அறியப்பட்டு இதுவரை 14 விவசாயிகளுக்கு 1,17,140 ரூபாய் இழப்பீட்டுத்தொகை காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 விவசாயிகளுக்கு பரிசிலனையில் உள்ளது.
இத்திட்டத்தின் படி [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: தென்னை


Powered By Indic IME