தென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு

பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. நெட்டை ரக தென்னை மரங்கள் வருடத்திற்கு 125 முதல் 150 காய்களும், குட்டை நெட்டை மற்றும் ஒட்டு ரகம் 300 முதல் 400 வரை தேங்காய்களையும் தருகின்றது.
50 சதவீதம் மகசூல் :
தென்னை மரங்கள் ஒரு [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: தென்னை

கரையான்

வெள்ளையான மேனி உடையது. எறும்பு போலத் தெரியும். ஆனால் எறும்பு இனத்தைச் சேர்ந்ததல்ல. கரப்பான் பூச்சி இனவகையைச் சேர்ந்தது.
இதற்கு அகேரமான பசி உண்டு. தீனி தீனி என்பதே இதன் மந்திரமாகும். இதன் ஜீரணப் பாதையில் உள்ள கிருமிகள் எந்தப் பொருளையும் எளிதாகக் கரைத்து விடும். அதனால் தான் கரைப்பான் என்ற பெயரே வந்தது.
மண்ணைக் குழைத்து மனையைக் கட்டும். மண் வீட்டிற்குள் புகுந்து மரத்தையே வெட்டும். இதற்கு எந்தப் பொருளும் ஒவ்வாதது இல்லை. மரங்களை மட்டுமல்ல; பாலத்தைக் கூடக் கரைத்துள்ளன! [...]

January 12, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: கட்டுரை தொடர்!

தென்னையில் நோய் மற்றும் பூச்சி தடுப்பு

தென்னங்கன்றைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த:
தென்னங்கன்றுகளை கரையான் மற்றும் நூற்புழு தாக்கி சேதப்படுத்தும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த இளம் தென்னங்கன்றுகளுக்கு அருகில் சோற்றுக்கற்றாழை கன்றுகளை பயிரிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வேர்களைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு பாதிப்பிலிருந்து தென்னங்கன்றுகளைப் பாதுக்காக்கலாம்.
தென்னையில் நோய்த் தடுப்பு வழிமுறைகள்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பருவமழையின் போது குளிர் காற்றுடன் மாறி, மாறி தட்பவெட்பம் ஏற்படுவது, இதனுடன் பனிப்பொழிவும் அதிகரிப்பது தென்னையில் நோய்த்தாக்குதலை அதிகப்படுத்தும். எனவே, [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: தென்னை

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்!

நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.
கரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள்
1. ஒரு பழைய பானை
2. கிழிந்த கோணி/சாக்கு
3. காய்ந்த சாணம்
4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்
கரையான் உற்பத்தி செய்முறை
பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் [...]

August 1, 2011 · sakthivel · No Comments
Tags: , , ,  · Posted in: கோழி வளர்ப்பு


Powered By Indic IME