பயிர்க்காப்பீட்டு திட்டம்

கரும்பு, வாழை, உளுந்து, கடலை, பயறுக்கு, பாதுகாப்பு

ரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களான கரும்பு, வாழை, உளுந்து, பயறு, கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பயிருக்கு காப்பீடு செய்யப்படும் தொகை, செலுத்தவேண்டிய பிரிமியம், பிரிமியம் செலுத்தவேண்டிய கடைசி நாள் வருமாறு.

பயிர் காப்பீடு செய்யப்படும் தொகை 
ஏக்கருக்கு ரூ.
பிரிமியம் அளவு செலுத்த வேண்டிய
மொத்த பிரிமியம் ரூ.
கடன் வாங்கும் சிறு/குறு மற்றும் இதர
விவசாயிகள் ரூ.
கடன் வாங்காத சிறு/ குறு
விவசாயிகள் ரூ.
பிரிமியம் செலுத்த கடைசிநாள்
[நடவு அல்லது விதைத்த ஒரு மாதத்திற்குள்]
கரும்பு  56680/- 3.05 1729/- 864/- 778/-
30-06-12
வாழை  2,53,170/- 6.10 15443/- 7724/- 6950/-
28-02-12
கடலை  25409/- 2.0 508/- 254/- 229/-
15-02-12
உளுந்து  2972/- 2.0 59/- 30/- 27/-
15-02-12
பயறு  3020/- 2.0 60/- 30/- 27/-
15-02-12

கடன் வாங்கும் சிறு/குறு விவசாயிகளுக்கும் இதர விவசாயிகளுக்கும் 50 சத மான்யமும் கடன் வாங்காத சிறு/குறு சிவசாயிகளுக்கு 55 சத மான்யமும் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் உங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது உங்களுக்கு சேமிப்பு கணக்குகள் உள்ள தேசிய வங்கியிலோ பிரிமியத்தொகையை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு 9443780661 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு பயிர்க்காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.பழனியப்பன் தெரிவிக்கின்றார்.

தகவல் அளித்தவர் முருகன், MSSRF, திருவையாறு

 

 

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: விவசாயம்


Powered By Indic IME