தென்னை நுனிகுருத்துடன் சாய்ந்துவிட்டது

என்னிம் தென்னந்தோப்பில் 8 வருட தென்னை மரங்கள் 100 உள்ளது, இதில் தற்போது ஒரு மரம் மட்டும் நுனிகுருத்துடன் சாய்ந்துவிட்டது, மரம் கூடுபோல கீழே விழுந்துவிட்டது, மற்ற மரங்களுக்கும் இந்த நோய் வராம இருக்க என்ன செய்வது? [திரு அந்தோணிசாமி, மேலதிருப்பூந்துருத்தி]

இது சிவப்புக்கூண் வண்டின் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு மரத்திற்கு மானோகுரோட்டோபாஸ் 10 மிலி மருந்தை 20 மில்லி தண்ணீரில் கலந்து ஒரு பாலித்தீன் பையில் ஊற்றி வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு தென்னை மரத்தின் கீழ் இளம் வேரை தோண்டி எடுத்து இளம் வேரை பாலித்தின் பைக்குள் விட்டு மருந்து வேரில் படுமாறு வைத்து கட்டிவிடவேண்டும்.

- திரு லெட்சுமிநாராயணன், Advisor, MSSRF

January 13, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை


Powered By Indic IME