தென்னை, மல்லிகை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம்

ஜுலை 20,2011 தங்கச்சிமடத்தில் உள்ள ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உச்சிப்புளி தேட்டக்கலை துறை சார்பாக தென்னை, மல்லிகை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உச்சிப்புளி தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு. S. சமுத்திரபாண்டியன் மற்றும் துணை வேளாண் அலுவலர் திரு. K. பழனிச்சாமி, விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்களுக்கான தென்னை நல வாரிய சேவைகள், அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி, உர மேலாண்மை, தென்னை மற்றும் மல்லிகை சாகுபடி முறைகள், பூச்சிக்கட்டுபாடு, ஊடுபயிர் சாகுபடி குறித்து விளக்கமளித்தார்.

அரசு அலுவலர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடி விவசாயிகளின் கேள்விகளையும், குறைகளையும் கேட்டறிந்தனர். உதவி வேளாண் அலுவலர் திரு. S. பார்த்திபன் வரவேற்பரை ஆற்றினார். கிராம வள மைய அலுவலர் திருமதி. ஸ்ரீகிருபா கிராம வள மையத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கினார். கிராம வள மைய அலுவலர் திரு. K. அப்துல் சலாம் அவர்கள் ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் விவசாயிகளுக்கான தேவையான தகவல்களை செல்போன்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாக அனுப்பும் திட்டத்தை பற்றி விளக்கிகமளித்தார்.

நிகழ்வில் 25 விவசாயிகள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கச்சிமடம் தென்னை விவசாய சங்க பொருளாளர் திரு. லாஹிர்தீன் அவர்களும் கிராம வள மைய பணியாளர்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தார்.

- கிராம வள மையம், தங்கச்சிமடம்

January 12, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: நிகழ்ச்சிகள்


Powered By Indic IME