மகளிர் திட்டம்

மகளிர் திட்டம் உருவாகக் காரணங்கள்

 • தமிழகத்தில் பெண்களின் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், சமூக, பொருளாதார அரசியல் ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே இருந்தனர்.
 • அரசு நலத் திட்டங்கள் பல இருந்தாலும், வறுமை நிலையை ஒழிக்க முடியாமல் இருந்தது.
 • அரசு நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, குறைவான நிலையில் இருந்தது.
 • பெண்கள் மத்தியில் கல்வி, சுகாதாரம், பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.
 • நலப்பணிகளை மக்களே கேட்டு பெற்றுக் கொள்ளும் (Demand creation) உணர்வு குறைந்த அளவிலேயே இருந்தது.

மகளிர் திட்ட வரலாறு

தமிழகத்தில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார நிலை வலுவடையவும் 1989 ஆம் ஆண்டு பன்னாட்டு வேளாண்மை அபிவிருத்தி நிதியகத்தின் (IFAD) நிதியுதவியுடன் தற்போதுள்ள 8 மாவட்டங்களில் (தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகியவை (IFAD) திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டது.

அவ்வெற்றியின் அடிப்படையில் “மகளிர்திட்டமாக” தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு முதல், நகரத்தில் வசிக்கும் ஏழைகளும் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்டத்திற்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மகளிர் திட்டத்தின் குறிக்கோள்

தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை மகளிரையும், சமூகரீதியாகவும், பொரருளாதார ரீதியாகவும், மேம்பாடு அடைய செய்வது, தாங்களாகவே தங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக் கொள்ள செய்து ” சுய சார்பு ” நிலைய அடைய செய்வது.

மகளிர் திட்ட நோக்கங்கள்

ஏழை மகளிரின் சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல்

சமூக மேம்பாடு

 • மகளிரிடையே தன்னம்பிக்கை மற்றும் ‘ நமக்கு நாமே’ என்ற உணர்வினை உண்டாக்குதல்
 • சாதி, சமய வேறுபாடு இல்லாமல், ஒற்றுமை, நல்லிணக்கத்தை உருவாக்குதல்
 • சமூக, விழிப்புணர்வை உண்டாக்கி, சமூக பிரச்சினைகளைத் தீர்வு காண மகளிரைத் தயார் செய்தல்.
 • உள்ளாட்சி அமைப்புகளில் மகளிரைப் பங்கேற்கச் செய்தல்.
 • கிராமத்தின் அடிப்படை தேவைகளை பெற தேவையான பணிகளில் ஈடுபட செய்தல்.
 • குடுப்பத்திலும், சமூகத்திலும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி பகிர்ந்தளிக்கச் செய்தல்
 • பெண்களுக்கு எதிரான இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி காண செய்தல்.
 • மகளிரிடையே மறைந்து இருக்கும் ஆற்றல்களைக் கண்டறிந்து வெளிக் கொணர்தல்.
 • சுகாதாரம், குடும்பநலம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றில் தெளிவடையச் செய்தல்.

பொருளாதார மேம்பாடு

 •  சிக்கன நடவடிக்கை மூலம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்.
 • அவசரக்கடன் தேவைகளை (கந்து வட்டி வாங்காமல்) சுயமாக பூர்த்தி கொள்ள செய்தல்.
 • கடன் தேவைகளுக்கு (ஈட்டி) கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து இருப்பதை முழுமையாக தவிர்த்தல்.
 • நேரத்தை வீணாக்காமல் வருவாய் ஈட்டும் தொழில்களில் ஈடுபடுத்துதல்.
 • தொழில் திறன் மற்றும் விற்பனை திறன் பெற்று குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வழிவகை காணுதல்.
 • மகளிர் செய்த உற்பத்திப் பொருள்களை இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யும் வகையில் திறனை வளர்த்தல்.
 • பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை பெற்று முன்னேற வழி காட்டுதல்.
 • மத்திய, மாநில அரசுகளின் கடனுதவிகளைப் பெற்று பயனடைதல்.
 • வாங்கிய கடனை முறையாக பயன்படுத்தி கண்ணியமாகத் திரும்ப செலுத்த கற்றுத் தருதல்.
 • மகளிர் பெயரில் சொத்துகளை உருவாக்கச் செய்தல்.

திறன் வளர்த்தல்

 •  பெண்களுக்கு பேசும் திறன், எமுதும் திறன், வாசிக்கும் திறன் போன்றவற்றை வளர்த்தல்.
 • தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல்.
 • நடைமுறை வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுத்தல்.
 • தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை கொண்டு செயல்களை முடிக்கும் திறனை மேம்படுத்துதல்.
 • தகவல் தொடர்பு திறனை வளர்த்தல்.
 • முடிவெடுக்கும் திறனை வளர்த்தல்.
 • தொழில் திறன் பயிற்சி பெற வழிவகை செய்தல்.
 • பெண்களுக்கான சட்டங்கள், உரிமைகளை அறிந்து, செலாக்கத்தில் ஈடுபடச் செய்தல்.
 • பதிவேடுகளைப் பராமரிக்கும் திறனை வளர்த்தல்.
 • குழுவாக இணைந்து சாதனைகள் புரிந்திடும் ஆற்றலை வளர்த்தல்.
 • கணிணி, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் திறமைகளை வளர்த்தல்.
 • பல திறன்களை வளர்த்துக் கொண்டு குடும்ப / கிராம / நகர் புற மேம்பாட்டிற்கு வழிவகை செய்தல்.
 • மகளிர்க்கு நிதி மேலாண்மையைக் கற்றுக் கொடுத்தல்.
 • போன்ற மகளிர் திட்ட நோக்கங்கள், சுய உதவி குழுக்களை ஒட்டுமொத்த மேம்பாட்டை அடையச் செய்வது சுய சார்பு தன்மைக்கு இட்டுச் செல்கிறது.

தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

தகவல் அனுப்பியதவர் : திருவையாறு கிராம ஆராய்ச்சி மையம்

January 3, 2012 · MSSRF · No Comments
Posted in: சுய உதவிக் குழு


Powered By Indic IME