Archive for April 27, 2012

மாமரம் காய்க்கவே இல்லை ஏன்?

மாமரம் பெரிய மரமாக உள்ளது, ஆனால் காய்க்கவே இல்லை ஏன்?
மாமரம் என்றால் பொதுவாக பிப்ரவரி மாதம் பூ பூக்கும் காலம், அதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் காய்க்காத மரமாக இருந்தால் கல்டார் என்ற மருந்தை ஒரு மரத்திற்கு 15 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவு கலந்து வேர் உள்ள பகுதியில் குழி எடுத்து தூரில் ஊற்ற வேண்டும் இவ்வாறு செய்வதால் மரத்தை காய்க்க வைக்கலாம்.
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும்  சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags:  · Posted in: மா மரம்

மாமரத்தில் பிஞ்சு அதிகம் பிடித்தாலும் வெம்பி, கருகி பின்னர் கொட்டிவிடுகிறது ஏன்?

20 வயதான மாமரத்தில் பிஞ்சு அதிகம் பிடித்தாலும் வெம்பி, கருகி பின்னர் கொட்டிவிடுகிறது இதனை எவ்வாறு சரி செய்யலாம்?
மாமரத்தினை பொதுவாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கவாத்து செய்து சூரிய ஒளியும் காற்றோட்டமும் படுமாறு செய்ய வேண்டும். மேலும் 20 வருடமான மரம் என்பதால் உர பற்றாக்குறை இருக்கலாம். எனவே, ஒரு மரத்திற்கு 4 – 5 கிலோகிராம் காம்ப்ளக்ஸ் உரம், குப்பை 50 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 3 கிலோ கலந்து மரத்தின் அருகில் குழி எடுத்து [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: மா மரம்

வாழை கன்றாக உள்ளபோது அழுகிவிடுகிறது எவ்வாறு சரி செய்வது?

முதலில் அழுகிய வாழை கன்றின் குருத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் முதல் கட்டமாக காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.
பின்னர் டிரைகோடெர்மா விரிடி 1 கிலோகிராம் 50 – 60 குப்பையுடன் கலந்து உரமாக அந்த மரத்திற்கு தரவேண்டும். இவ்வாறு உரம் கொடுக்கும் போது மண்ணில் உள்ள கிருமிகள் செத்துவிடும். மேலும் கீழ்கண்ட உர மேலாண்மை செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: வாழை

தென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது ஏன்?

2 வயதான தென்னை மரம் பாளை விடும்போது கத்தரி வைத்து வெட்டியது போல் வருகிறது. எவ்வாறு இதனை சரிசெய்வது?
30 – 40 கிராம் குருணை மருந்தை சிறிய பாலிதீன் பையில் போட்டு பையில் சிறு சிறு துளைகள் போட்டு மரத்தின் 3வது மட்டையின் இடுக்கில் சொருகிவிட்டால் விசவாயு தாக்கி புழு இறந்து போகும். பின்னர் வேப்பம் பிண்ணாக்கு மரத்தின் அடியில் கொடுத்து வரமரம் நன்றாக வளரும்.
நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும்  சுந்தரமுடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்
பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
தொகுப்பு [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: தென்னை

தென்னை மரத்தின் தூர் உளுத்து கொட்டுகிறது, குரும்பை உதிர்கிறது ஏன்?

5 வயதான தென்னை மரம் 2 மாதமாகத்தான் தூர் உளுத்து கொட்டுகிறது, குரும்பை உதிர்கிறது, மேலும் காய் சிறுத்து கொட்டிவிடுகிறது ஏன்?

தென்னை மரத்தின் தூர் பகுதியில் சிவப்பு கூன்வண்டு சிறு சிறு துளைகள் துளைத்து அதன் வழியாஅனைத்தையும் களிமண் வைத்து பூசவேண்டும், பின்னர் மிச்ச முள்ள அந்த ஒருதுளையின் உள்ளே உள்ள அனைத்தையும் கத்தி வைத்து நன்றாக சுரண்டி எடுத்து விட்டு அதனுள் celphos என்ற மாத்திரையை வாங்கி உள்ளே வைத்து அந்த ஓட்டையையும் களிமண் வைத்து [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: தென்னை

மல்லிகை பூவில் பூஞ்சாலை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

மல்லிகையில் பூஞ்சான நோயை கட்டுப்படுத்துவது எப்படி
மல்லிகை பதியன் போட மண்ணை தயார்படுத்தும் மல்லிகை விவசாயிகளே! முதலில் மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது அவசியம். மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க மற்றும் பூஞ்சான நோயில் இருந்து கட்டுப்படுத்த பதியன் போடும் முன் டிரைகோடெர்மா விரிடி (Trichoderma viridi) 1 கிலோகிராம், சூடோமோனாஸ் (Psuedomonas) 1 கிலோகிராம் இரண்டையும், 20கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து 3 நாட்கள் வைத்து பின்னர் மண்ணுடன் கலப்பதால் மண்ணில் உள்ள நுண்கிருமிகள் [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: மல்லிகை பூ

மாமரத்தில் பூ உதிர்வது ஏன்?

மாமரத்தில் பூ அல்லது சிறிய பிஞ்சு உதிர்ந்தால் பையோசைம் டானிக் (Biozyme tonic) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இந்த டானிக் கிடைக்காத போது பிளானோபிக்ஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி அளவு கலந்து தெளிக்கலாம். ஒரு மரத்திற்கு குறைந்தது 10 முதல் 15 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு மருந்து கலந்து தெளிக்க வேண்டும்

இந்த மருந்து தெளித்த 5 நாட்களுக்குப்பிறகு all 19 (19-19-19) என்ற மருந்து [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: மா மரம்


Powered By Indic IME