Archive for March, 2012

அசோலா – சிறந்த கால்நடை தீவனம்

அசோலா நீர் நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணி வகையினைச் சார்ந்தது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச் சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தி உற்பத்திச் செலவினைக் கணிசமாக குறைக்க முடியும் என்பதை உழவர் பெருமக்கள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர்.
அசோலாவிலுள்ள சத்துக்கள் :
அசோலாவில் 25- 30 விழுக்காடு புரதச்சத்து, 14-15 விழுக்காடு நார்ச்சத்து, சுமார் 3 விழுக்காடு கொழுப்புச் சத்து, 45- 50 விழுக்காடு [...]

March 31, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: தீவனப்பயிர்கள்

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு – விளக்கம்
குறிப்பிட்ட காலங்களில் மட்டும் பெய்யும் மழைநீரை, குடிநீரின் அவசியத்தை உணர்ந்து, நேரடியாக சேகரிப்பதும், பூமிக்குள் செலுத்துவதுமே மழைநீர் சேகரிப்பாகும்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம்:

தண்ணீர் பற்றாக்குறையை தவிர்த்திட.
நீர் வளத்தை அதிகரித்திட.
நிலத்தடி நீர் மட்டம் குறைவதைத் தடுத்திட.
நீரின் தரத்தை அதிகரித்திட.
கடலோரப்பகுதிகளில் கடல்நீர் ஊடுவருவலைத் தவிர்த்திட.
வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்திட.
களிமண் பகுதிகளில் உள்ள கட்டடங்களில் உருவாகும் விரிசல்களைத் தவிர்த்திட.

மழைநீர் சேகரிப்பு – வழிமுறைகள் :

நேரடியாக பாத்திரங்கள், தொட்டிகளில் சேர்த்து வைத்து தேவைக்கு ஏற்ப உபயோகித்தல்.
மழைநீரை பூமிக்குள் செலுத்தி நீர் வளத்தை [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: நீர் வளம்

மானாவாரி நிலங்களில் களைகளை கட்டுப்படுத்தும் முறைகள்

மானாவாரி நிலங்களில் கோரை,அருகம்புல் ஆகிய களைகளை கட்டுப்படுத்தும் முறைகள்
உலகெங்கும் உள்ள 18 மோசமான களைகளில் பயிருக்குச் சேதம் ஏற்படுத்துவதில் கோரை முதல் இடத்தையும் அருகம்புல் இரண்டாவது இடத்தையும் வகிக்கின்றன. இக்களைகள் அதிகம் உள்ள நிலங்களில் பயிர் இல்லாத காலத்தில் கிளை போசேட் என்ற களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 முதல் 10 மி.லி வீதம் கலந்து களைகளின் மீது படும்படி தெளிக்க வேண்டும். இக்கரைசலில் ஒரு லிட்டருக்கு பத்து கிராம் வீதம் அம்மோனியம் சல்பேட்டையும் ஒரு [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Posted in: விவசாயம்

மானாவாரி சாகுபடி – தொழில் நுட்பங்கள்

மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெற தொழில் நுட்பங்கள்

கோடை உழவு செய்தல்.
சரிவுக்குக் குறுக்கே கடைசி உழவு செய்தல்.
மூன்று ஆண்டுகட்கு ஒரு முறை ஆழமாக உழவு செய்தல்.
வறட்சியைத் தாங்கும் பயிர்வகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்தல்.
விதை கடினப்படுத்துதல்.
வண்டல் மண்,குளத்து மண், ஏரி மண், தொழுஉரம் போன்ற இயற்கை இடுபொருட்களை இடுதல்.
ஒருங்கிணைந்த உர மேலாண்மையைக் கடைப்பிடித்தல்.
ஊடுபயிர் சாகுபடி செய்தல்.
காலத்தே களை எடுத்து பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்.
ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல்.

தகவல்: வானொலி செய்திக்கதிர், மார்ச் 2012.
தகவல் அனுப்பியவர் – வினோத் கண்ணா, ம சா சுவாமிநாதன் [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: விவசாயம்

உளுந்து பயிரில் புழுதாக்குதல்

உளுந்து பயிரில் புழுதாக்குதல் கட்டுப்படுத்தும் வழி:
புரோட்டினியா புழு:
பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சைப்பயறுகளில் புரோட்டினியா புழு தாக்குதல் காணப்படுகிறது.  நெல் தரிசு உளுந்து பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளில் புரோட்டினியா புகையிலைப்புழு முக்கியமானதாகும்.  இப்புழு முழு இலைகளையும், பூ மொட்டுகளையும், காய்களையும் தின்று சேதப்படுத்தும்.  இப்பூச்சியின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகம் காணப்படும்.  புழுக்கள் பகல் நேரத்தில் மண் வெடிப்புகளிலும், சருகுகளின் அடியிலும் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரின் அடித்தூர்களிலும் பதுங்கி இருக்கும்.  அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறமாகவும், [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Posted in: பயறுவகை

எள் மகசூல் பெருக்கிட

மாசிப்பட்டம் மடியில் பணம் என்பது எள் விவசாயத்திற்கான வழக்குச்சொல். ஆனால் இந்த ஆண்டில் தாளடி, பிந்திப்போனதால் பல இடங்களில் அறுவடைதற்போது தான் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தொடர்ந்து கோடையிலும் நெல் சாகுபடி செய்யலாமா?  என்று சிலர் சிந்திக்ககூடும். இது நடக்கக்கூடிய காரியமா?  மின் வெட்டு நம்மை நாளும் அச்சுறுத்தி வருகிறது.  இந்நிலையில் குறைந்த நீரில் குறைந்த மகசூல், அதிக லாபமும் பெற என்ன செய்யலாம் என்பதே நம் எண்ணமாக இருக்கவேண்டும்.  அதன் அடிப்படையில் நம்முன்னே நல்ல மகசூல் [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Posted in: எள்

பெண்களுக்கான சுகாதார குறிப்புகள்

15- 49 வயதுவரையுள்ள பெண்களுக்கு:
15- 49 வயது வரை, கருத்தரிக்கக் கூடிய வயது என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் போதும் பிரசவமான பிறகும் தான் கவனிப்பு அளிக்கபடுகிறது. ஒரு பெண் தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தப்பின், அவளுடைய நலனைக் குறித்து தானோ அல்லது மற்றவர்களோ போதுமான கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த வயதில் தான், பெரும்பாலும் பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக பெண்கள் தங்கள் உடல் நலனைக் [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Posted in: பெண்கள்

கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர்

“நீரின்றி அமையாது உலகு” – வள்ளுவர் வாக்கு.  எந்த உயிரினமானாலும் நீரின்றி வாழ இயலாது.  கால்நடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கன்று.  உயிரினங்கள் உயிர் வாழ காற்றும் உணவும் எவ்வளவு அவசியமோ, நீரும் அவ்வளவு அவசியமே.  உணவின்றி கால்நடைகள் ஒரு மாதம் கூட உயிர் வாழ இயலும்.  ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது அரிது.
தண்ணீரின் அவசியம்:

கறவை மாடுகளின் உடல் எடையில் 70% நீரும், பாலில் 87% நீரும் உள்ளது.  உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் நீர் [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: கால்நடை வளர்ப்பு

நச்சுத் தாவரங்கள்

பயனுள்ள பசுந்தழைகள் குறித்து எழுதும்போது, நச்சுத் தாவரங்கள் சில குறித்தும் தெரிவிப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.
அரளி (Nerium oleander)
தமிழ்நாடு எங்கும் உள்ள இது மிகக் கொடிய நச்சுத் தாவரம். ஆனால் பல வண்ணங்களில் பூக்கும் பல வகைகள் உண்டு. அடுக்கு அரளி, ரோசாப்பூ போன்று அழகாகப் பூக்கும். பலர் வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பார்கள். ஆனால் அரளி எவ்வளவு நச்சுத் தன்மை கொண்டது என்றால் 5 கிராம் காய்ந்த தழை ஒரு மாட்டையே கொல்லவல்லது.
அரளியை ஆடு சாப்பிடுமா? [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: வெள்ளாடு

புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்

வெள்ளாடுகளுக்கு ஏற்ற புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்
வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் மொச்சையினப் பயிர்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது. ஆகவே, இவை குறித்தும் விவாதிக்கலாம். இது குறித்து அலமாதி தீவன உற்பத்தி நிலைய விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

கோ- 1 கலப்பின நேப்பியர் புல் நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: வெள்ளாடு


Powered By Indic IME