Archive for the ‘நெல்’ Category

குறுவை அதிக மகசூல் பெற

குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:
விதை நேர்த்தி:
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.
இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]

June 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: குறுவை சாகுபடி

நெற்பயிர்ப் பாதுகாப்பு

பூச்சி நோய்களில் இருந்து நெற்பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?
தமிழகம், புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கக் கூடிய பூச்சிகளும், நோய்களும் அதிகரித்துள்ளன. அவற்றை சரியான மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம்) தற்போது நடைபெறும் சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களில் ஆடுதுறை 37 மற்றும் ஆடுதுறை 43 போன்ற நெல் ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நெல் ரகங்களில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை [...]

June 15, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

பழுப்பு தத்துப் பூச்சி அல்லது புகையான்

பழுப்பு தத்துப் பூச்சி அல்லது புகையான் – நிலபர்வதா லூஜென்ஸ்
பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்
பெண் பூச்சிகள், முட்டைகளை பெரும்பாலும் இரண்டிரண்டு வரிசைகளாக இலை உறைகளிலும், இலைகளின் நடு நரம்பின் இரண்டு பக்கங்களிலும் சொருகிவிடும். ஒரு பூச்சி 650 முட்டைகள் வரையில், ஒவ்வொரு வாpசையிலும் 1-16 முட்டைகளை இடும். முட்டைகளிலிருந்து 5-7 நாட்களில் இளம் குஞ்சுகள் வெளிவரும். புகையானில் இரண்டு வெவ்வேறு விதமான பூச்சிகள் உண்டு. ஒன்று நன்றாக வளர்ந்த இறக்கைகளைக் கொண்ட பூச்சிகள். இரண்டாவது வளர்ச்சியற்ற, குறுகிய இறக்கைகளைக் [...]

May 2, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

இலைச் சுருட்டுப் புழு

இலைச் சுருட்டுப் புழு – நெஃபெலோக்ரோசிஸ் மெடினாலிஸ்
பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்
பெண் அந்துப் பூச்சி, தளிர் இலைகளின் அடிப்பரப்பில் 10-15 முட்டைகளை ஒரே தொகுதியாக, பெரும்பாலும் வரிசையாக இடும். முட்டைகள் வெண்மையாக இருக்கும். 6-7 நாட்களில் இளம் புழுக்கள் வெளிவரும். புழுப் பருவம் 25-30 நாட்கள் வரை நீடிக்கும். முழு வளர்ச்சியடைந்த புழு சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் இலையினுள்ளேயே கூண்டுப் புழுவாக மாறும். கூண்டுப் புழுக்களிலிருந்து 6-8 நாட்களில் அந்துப் பூச்சிகள் வெளிவரும். வாழ்க்கைச் சுழல் 30-42 நாட்களில் முடியும்.

தாக்குதலின் [...]

April 30, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

பார்த்தீனியம்

பார்த்தீனியத்தின் தோற்றம்:
பார்த்தீனியம் நட்சத்திர களை, கேரட் களை, வெள்ளை தொட்டி, மேல் வெள்ளை என அழைக்கப்படுகிறது. பார்த்தீனிய களை 1956- ல் மகாராஷ்ராவில் கோதுமை இறக்குமதி செய்த போது ஊடுறுவியதாக கருதப்படுகிறது.  இக் களைச்செடிகள் முட்டை வடிவமான இலைகளை கொண்டது மற்றும் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் பெற்றுள்ளது. இச்செடிகள் பொதுவாக அதிக ஆழம் கொண்ட ஆணிவேர் அமைப்புடையது. தண்டு மற்றும் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் துல்லியமாக காணப்படும். இச் செடிகள் பார்ப்பதற்கு நீலம் [...]

April 21, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: களைக் கட்டுப்பாடு

ஏடிடீ 46 நெல் – பயிரில் இலைகள் சிவந்து காணப்படுகிறது

நான் ஒரு ஏக்கரில் ஏடிடீ 46 நெல் நடவு செய்து தற்போது தண்டு உருளும் பருவத்தில் உள்ளது. இந்த நேரத்தில் நெல் பயிரில் இலைகள் சிவந்து காணப்படுகிறது, இதைக்கட்டுப்படுத்த என்ன செய்வது? [திரு. கணேசன், குழிமாத்தூர்]

ஒரு ஏக்கருக்கு Saaf – 250 கிராம்
டிரைசைக்ளோசோல் – 120 கிராம் இவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்கள் நன்கு நனயும்படி தெளித்துவிடவும்.
மேலும் அடுத்த நாள் தெளிப்பதற்காக உள்ள நெல் நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 1/2 கிலோவை [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: நெல்

ஏடிடி 46 : வெண்கதிர் வந்துகொண்டிருக்கிறது என்ன செய்வது?

ஏடிடி 46 நடவு செய்து தற்போது கதிர் வந்துகொண்டிருக்கிறது, தற்போது பயிரில் வெண்கதிர் வந்துகொண்டிருக்கிறது இதற்கு என்ன செய்வது? [கிருஷ்ணமூர்த்தி, இலுப்பக்கோரை]
கதிர் வந்த நிலையில் நெல் பயிருக்கு ஏதும் செய்ய முடியாது, இந்த நேரத்தில் நெல் பயிரின் தாள் பகுதியில் மட்டும் செவின் 10% மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- திரு லெட்சுமிநாராயணன், Advisor, MSSRF
Print PDF

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: நெல்

எலி கட்டுப்பாடு

விவசாய நண்பர்களே தற்போது சம்பா, தாளடி நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர் வெளிவந்துகொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் வயலில் நெல் பயிரை எலிகள் சேதப்படுத்தி இருக்கிறது. இம்மாதிரி நேரத்தில் எலிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். எலிகளை கட்டுப்படுத்த

வயலைச்சுற்றுயுள்ள, எலிகளுக்கு மறைவிடம் தரும் களைச்செடிகளை அழித்தல்.
வளைகளை வெட்டி எலிகளை பிடித்தல்
கிட்டிவைத்து எலிகளை பிடித்தல்.
ஆந்தை, கோட்டான் அமர்வதற்கு குடில் அமைத்தல்.
சாணம் கலந்து தண்ணீர் பானையை மண்ணில் புதைத்து எலியை கவர்ந்து அழித்தல்.
சிங்க் பாஸ்பைடு விஷம் கலந்து வைத்தல் [1:49]
புரோமோடைலான் விஷ [...]

January 13, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: எலிக் கட்டுப்பாடு

இராஜராஜன் ஆயிரம் நெல் சாகுபடி

அதிக மகசூல் தரும் இராஜராஜன் ஆயிரம் நெல் சாகுபடி முறை
அதிக மகசூல் தரும் இராஜராஜன் ஆயிரம் நெல் சாகுபடி முறையில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்:
இராஜராஜன் ஆயிரம் நெல் சாகுபடி
விவசாயத்தில் அதிக அளவு விளைச்சலை அதிகரிக்கவும் சாகுபடி செலவை குறைத்து அதிக வருவாய் பெற இராஜராஜன் ஆயிரம் நெல் சாகுபடி முறையே சிறந்தது.
ஒரு ஏக்கர் நடவிற்கு ஒரு செண்ட் நாற்றங்காலே போதுமானது. ஏக்கருக்கு 2 கிலோ சான்று [...]

January 12, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: நெல்

குறுவை சாகுபடி அதிக மகசூல் பெற

குறுவை சாகுபடி அதிக மகசூல் பெற தொழில்நுட்பங்கள் :
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு என முன்கூட்டியே திறக்கபட்ட பாசன வசதியை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் குறித்து பார்ப்போம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை முன் கூட்டியே திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 3 லட்சத்து 34 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் சாகுபடிதில் மற்ற பருவங்களைவிட குறுவையில் கூடுதல் மகசூல் [...]

January 12, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: குறுவை சாகுபடி


Powered By Indic IME