Archive for the ‘ஆடு’ Category
ஆடுகளை தேர்வு செய்தல்
ஆடுகளை நாம் கறிக்காக வளர்ப்பதால் நல்ல ஆரோக்கியமான வளமான ஆடுகளையே வாங்கி வளர்க்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ற ஆடுகளை வாங்கி வளர்க்கலாம். சினை ஆடுகளாக வாங்கினால் நாம் வாங்கியவுடன் அவற்றிலிருந்து குட்டிகளை பெறலாம். பெட்டை ஆடுகளை வாங்கும் பொழுது அவை 1 வருடம் நிரம்பியவைகளாக வாங்க வேண்டும். இளம் குட்டிகளாக வாங்கும் பொழுது 3 மாதத்திற்கு மேலான வளமான குட்டிகளை வாங்கி வளர்க்கலாம். 20 பெட்டை ஆடுகளுக்கு 1 கிடா என்ற விகிதத்தில் ஆடுகளை வளர்க்க [...]
May 2, 2012
·
MSSRF ·
No Comments
Tags: ஆடு, தேர்வு செய்தல், ரிச்சர்ட் ஜெகதீசன் · Posted in: ஆடு
நச்சுத் தாவரங்கள்
பயனுள்ள பசுந்தழைகள் குறித்து எழுதும்போது, நச்சுத் தாவரங்கள் சில குறித்தும் தெரிவிப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.
அரளி (Nerium oleander)
தமிழ்நாடு எங்கும் உள்ள இது மிகக் கொடிய நச்சுத் தாவரம். ஆனால் பல வண்ணங்களில் பூக்கும் பல வகைகள் உண்டு. அடுக்கு அரளி, ரோசாப்பூ போன்று அழகாகப் பூக்கும். பலர் வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பார்கள். ஆனால் அரளி எவ்வளவு நச்சுத் தன்மை கொண்டது என்றால் 5 கிராம் காய்ந்த தழை ஒரு மாட்டையே கொல்லவல்லது.
அரளியை ஆடு சாப்பிடுமா? [...]
March 30, 2012
·
MSSRF ·
No Comments
Tags: Ipomoea carenea, Lantana camera, Nerium oleander, Puscilla spp, அரளி, ஆடு, காட்டாமணி, நச்சுத் தாவரங்கள், நெய்வேலி காட்டாமணக்கு, பாலச்செத்தை, லாண்டனா · Posted in: வெள்ளாடு
புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்
வெள்ளாடுகளுக்கு ஏற்ற புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்
வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் மொச்சையினப் பயிர்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது. ஆகவே, இவை குறித்தும் விவாதிக்கலாம். இது குறித்து அலமாதி தீவன உற்பத்தி நிலைய விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
கோ- 1 கலப்பின நேப்பியர் புல் நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் [...]
March 30, 2012
·
MSSRF ·
No Comments
Tags: Guinea Grass, Hamil, Hedge Lucerne, Lucerne, Stylosanthes, அமில்வகை, உடை (குடைவேல்), கருவேல், கலப்பின நேப்பியர் புல், கினிபுல், கிளுவை, குதிரை மசால், கொடுக்காய்புளி, புற்கள், மொச்சையினப் பயிர்கள், வெள்ளாடு, வெள்வேல், வேலிமசால், ஸ்டைலோ · Posted in: வெள்ளாடு
இறைச்சி, பால் உற்பத்திக்குத் தீவனம் அளித்தல்
இறைச்சி உற்பத்திக்குத் தீவனம் அளித்தல்
வெள்ளாடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. சிலர் ஓரிரு கடாக் குட்டிகனை வாங்கி வளர்த்து, விற்பனை செய்வர். படித்த பட்டதாரிகள், பல கடாக்களை வளர்த்து நிறைந்த வருவாய் பெற வாய்ப்புள்ளது. வெள்ளாடுகள் விரைவில் எடைகூடும்படி தீவனம் அளிக்கப்பட வேண்டும். அப்படியானால்தான் வளர்ப்போருக்கு அதிக ஆதாயம் கிடைப்பதுடன், இறைச்சியும் மிருதுவாக இருக்கும். வெள்ளாட்டுக் குட்டிகளின் வளர்ச்சி வீதம் 3 மாதம் முதல் 6 மாதம் வரை அதிகமாக இருக்கும். ஆகவே, 6 மாத வயதில் ஆட்டுக்கடாக்கள் நல்ல [...]
March 27, 2012
·
MSSRF ·
No Comments
Tags: ஆடுகள், இறைச்சி, பால், வெள்ளாடு · Posted in: வெள்ளாடு
தீவனத் தேவை
வெள்ளாடுகளுக்கு எவ்வளவு தீவனம் தேவை
வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் என்று குறிப்பிட்டேன். நமது பகுதி ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன. (பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும்.
ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.
காய்வு நிலையில்
பசுந்தழை / [...]
March 27, 2012
·
MSSRF ·
No Comments
Tags: கலப்புத் தீவனம், காய்வு நிலை, தவிடு, தானிய வகைகள், தீவனத் தேவை, துவரை இலை, பிண்ணாக்கு, புளியங்கொட்டை, வெள்ளாடு, வேர்க்கடலைக் கொடி, வேலிக் கருவை நெற்றுகள் · Posted in: வெள்ளாடு
தீவனம் அளித்தல் & மேலாண்மை
தீவனம் அளித்தலும் தீவன மேலாண்மையும்
வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது. அவை உயிர்வாழ மட்டுமல்லாது. மனிதனுக்குப் பயனுள்ள இறைச்சிக்கும் பால் உற்பத்திக்காகவும் ஆகும். மற்ற உயிரினங்களைப் போன்றே ஆடுகளுக்குச் சக்தி அளிக்கும் மாவுப் பொருள், கொழுப்பு. உடல் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் தேவையான புரதம் மற்றும் தாது உப்புகள், வைட்டமின்கள் தேவை. உணவுப் பொருட்கள் செரிக்கவும். உடலில் ஏற்றுக் கொள்ளப்படவும் நீர் தேவை. உடலில் 20% நீர் குறைவுபட்டால் உயிர் வாழ முடியாது. நீர் சத்துப் பொருள் எனப்படாவிட்டாலும், அது உணவுடன் [...]
March 27, 2012
·
MSSRF ·
No Comments
Tags: உளுந்துச் செடி, உளுந்துப் பொட்டு, தட்டைப்பயிற்றுச் செடி, தண்ணீர், தாதுஉப்பு, தீவனம், துவரை பொட்டு, புரதம், மேலாண்மை, வெள்ளாடு, வைட்டமின் · Posted in: வெள்ளாடு
இனவருத்தித் திட்டங்கள்
உள்இனச்சேர்க்கை (In Breeding)
மிக நெருங்கிய உறவு நிலையில், இனச் சேர்க்கை செய்வதாகும். இத்திட்டத்தின் மூலும் பர அடிப்படை ஆய்வுகள் மற்றும் உறவுள்ள குடும்பங்கள், புது இனங்கள் தோற்றுவுக்க உள் இனச் சேர்க்கை முறை பின்பற்றப்படுகின்றது. உயர்வினங்களில், புது இனங்கள் தோற்றுவிக்கப்படும்போது மட்டுமே ஆரம்பக் கட்டங்களில் உள் இனச் சேர்க்கை முறை கையாளப்படுகின்றது. ஆனால், கோழிகளில் கலப்பினக் குஞ்சுகள் உற்பத்திக்கும், ஆய்வுக்கூட எலிகள் , கினி, பன்றிகள், முயல் போன்றவை ஒரே மாதிரியாக இருப்பதற்காகவும் உள் இனச் சேர்க்கை [...]
March 17, 2012
·
MSSRF ·
No Comments
Tags: இனவருத்தித் திட்டங்கள், வெள்ளாடு · Posted in: வெள்ளாடு
இனப் பெருக்கம்
வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும்
செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது
வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது
வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும்
வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும்
செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான [...]
March 17, 2012
·
MSSRF ·
No Comments
Tags: இனப் பெருக்கம், வெள்ளாடு · Posted in: வெள்ளாடு
வெள்ளாடு வளர்ப்பு
வெள்ளாடு வளர்ப்பு – பொதுக் குறிப்புகள் மற்றும் வளர்ப்பு முறைகள்
திட்டமிட்டு வெள்ளாடு வளர்க்கத் தொடங்குபவருக்கு, விலங்கினங்கள் மீது ஒரு பாசமும், ஆர்வமும் இருக்க வேண்டும். இது ஓர் அடிப்படைத் தேவை எனலாம். வெள்ளாடுகள் நம்மைப்போல் உயிருள்ளவை. ஆகவே, அவற்றின் மீது அக்கறை காட்டினால்தான் அவை சிறக்கும். அதக் காரணமாக அதிக வருவாய் பெற முடியும். அடுத்து, அதிக அளவில் நல்ல முறையில் வெள்ளாடு வளர்ப்பவருக்குத் தேவையான நிலமும், முதலீடும் தேவை. அடுத்தபடியாக ஓரளவு வெள்ளாட்டுப்பால் விற்பனைக்கும் ஏற்பாடு [...]
March 17, 2012
·
MSSRF ·
No Comments
Tags: வெள்ளாடு வளர்ப்பு, வெள்ளாடுகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை · Posted in: வெள்ளாடு
வெள்ளாட்டின் பயன்கள்
இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் செம்மறி ஆட்டு இறைச்சிக்கும், வெள்ளாட்டு இறைச்சிக்கும் அதிக வேறுபாடு காட்டப்படுவதில்லை. தமிழ் நாட்டின் பல பகுதினளில் வெள்ளாட்டு இறைச்சியே அதிகம் விரும்பப்படுகின்றது. இது போன்று, மலேசியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வெள்ளாட்டு இறைச்சியே அதிகம் விரும்பப்படுகிறது. ஆனால், முன்னேறிய மேல் நாடுகளில், வெள்ளாட்டு இறைச்சி, செம்மறி ஆட்டு இறைச்சி போல் விரும்பப்படுவதில்லை. வெள்ளாடுகள் வெட்டப்படும்போது 50 முதல் 55% இறைச்சி கிடைக்கிறது. எனினும் கீழை நாடுகளில் அதிக அளவில் வெள்ளாட்டின் [...]
March 16, 2012
·
MSSRF ·
No Comments
Tags: வெள்ளாட்டின் பயன்கள் · Posted in: வெள்ளாடு

