Archive for the ‘பூச்சிக் கட்டுப்பாடு – நெல்’ Category

நெற்பயிர்ப் பாதுகாப்பு

பூச்சி நோய்களில் இருந்து நெற்பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?
தமிழகம், புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கக் கூடிய பூச்சிகளும், நோய்களும் அதிகரித்துள்ளன. அவற்றை சரியான மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம்) தற்போது நடைபெறும் சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களில் ஆடுதுறை 37 மற்றும் ஆடுதுறை 43 போன்ற நெல் ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நெல் ரகங்களில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை [...]

June 15, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

பழுப்பு தத்துப் பூச்சி அல்லது புகையான்

பழுப்பு தத்துப் பூச்சி அல்லது புகையான் – நிலபர்வதா லூஜென்ஸ்
பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்
பெண் பூச்சிகள், முட்டைகளை பெரும்பாலும் இரண்டிரண்டு வரிசைகளாக இலை உறைகளிலும், இலைகளின் நடு நரம்பின் இரண்டு பக்கங்களிலும் சொருகிவிடும். ஒரு பூச்சி 650 முட்டைகள் வரையில், ஒவ்வொரு வாpசையிலும் 1-16 முட்டைகளை இடும். முட்டைகளிலிருந்து 5-7 நாட்களில் இளம் குஞ்சுகள் வெளிவரும். புகையானில் இரண்டு வெவ்வேறு விதமான பூச்சிகள் உண்டு. ஒன்று நன்றாக வளர்ந்த இறக்கைகளைக் கொண்ட பூச்சிகள். இரண்டாவது வளர்ச்சியற்ற, குறுகிய இறக்கைகளைக் [...]

May 2, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

இலைச் சுருட்டுப் புழு

இலைச் சுருட்டுப் புழு – நெஃபெலோக்ரோசிஸ் மெடினாலிஸ்
பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்
பெண் அந்துப் பூச்சி, தளிர் இலைகளின் அடிப்பரப்பில் 10-15 முட்டைகளை ஒரே தொகுதியாக, பெரும்பாலும் வரிசையாக இடும். முட்டைகள் வெண்மையாக இருக்கும். 6-7 நாட்களில் இளம் புழுக்கள் வெளிவரும். புழுப் பருவம் 25-30 நாட்கள் வரை நீடிக்கும். முழு வளர்ச்சியடைந்த புழு சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் இலையினுள்ளேயே கூண்டுப் புழுவாக மாறும். கூண்டுப் புழுக்களிலிருந்து 6-8 நாட்களில் அந்துப் பூச்சிகள் வெளிவரும். வாழ்க்கைச் சுழல் 30-42 நாட்களில் முடியும்.

தாக்குதலின் [...]

April 30, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

நெற்பயிரில் குலைநோய்

தற்போது நிலவும் மேகமூட்டத்துடன் கூடிய மழை காரணமாக, சம்பா, தாளடி பருவத்தில் நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் அதிக அளவில் காணப்படும்.
நெற்பயிரில் குலைநோயை கண்டறியும் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்:

குலைநோய் – பூஞ்சான நோய்
இலைகளில் நீண்ட கூண்வடிவ புள்ளிகள் காணப்படும். நாளைடைவில் பெரிய புள்ளிகளாகி பிறகு நார் நாராகி பிரியும்.
இலை, கணு, கதிர் கழுத்து மற்றும் நெல் மணி ஆகியவற்றை தாக்கும்.
காற்றின் மூலம் பரவும்

தாக்குதல் அறிகுறி:

இலைகளில் கண்வடிவ புள்ளிகள்.
தாக்கப்பட்ட கழுத்துப்பகுதி கருப்பாக மாறும், காற்றில் ஒடிந்துவிடும்.
நாற்றங்கால் தாக்கப்பட்டால் கருகிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

பயிரை [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

இலைப்புள்ளி மற்றும் நெற்பழ நோய்

நெற்பயிரில் இலைப்புள்ளி மற்றும் நெற்பழ நோயை தடுத்திட
தற்போது நெல் வயலில் கலப்பு கதிராக வந்துள்ள இடங்களில் இலைப்புள்ளி நோய் மற்றும் நெற்பழ நோயிலிருந்து பயிர்களைக்காத்திட லிட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ் மற்றும் 2 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தெளிக்கலாம். இதனால் இலைப்புள்ளி நோய் நெற்பழ நோய் வராமல் தடுக்கலாம். மேலும் முற்றிய பயிர்களில் உள்ள நெல் மணிகள் சேதப்படாமல் காலத்தே அறுவடை செய்யலான்னு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஆலோசகர் வ. பழனியப்பன் அவர்கள் [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

நெல் – இலைப்பேன் தாக்குதல்

இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த
திருவையாறு பகுதியில் தாளடி, பிந்தைய சம்பாவில் நடவு நட்ட 20 நாள் இளம் பயிரில் இலைப்பேன் தாக்குதல் ஆங்காங்கு தென்படுகிறது.
நெல் பயிரில் இளம் தூர்களில் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் பச்சையம் இழந்து தோகை விரியாமல் சுருண்டு காணப்படும். அந்த நேரத்தில் நெல் தோகைகளை விரித்துப்பார்த்தால் உள்ளே கருப்பு நிற பேன்கள் இருப்பது தென்படும். காலை நேரத்தில் பனிப்பதத்தில் நெல் பயிரின் மேல் கையால் தட்டிப்பார்த்தால் கருப்பு நிற பேன்கள் கையில் ஊறுவதை பார்க்கலாம். இதைக்கட்டுப்படுத்த [...]

January 5, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

உழவியல் முறை: பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்

• ஆழமாக உழும்போது மண்ணில் வாழும் சில பூச்சிகளும், நோய்க் காரணிகளும் புதைக்கப்படுகின்றன அல்லது மண்ணிற்கு மேலே கொண்டு வரப்பட்ட பறவைகளால் உண்ணப்படுகின்றன.
• பரிந்துரைக்கப்படும் அளவிற்கு அதிகமாகத் தழைச்சத்து உரமிடும் போது அது பூச்சி நோய் காரணிகளின் பெருக்கத்திற்குக் காரணமாகிறது. அதனால் பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை ஒரே தடவை இடாமல் இரண்டு, மூன்று முறைகள் பிரித்து இடுவதன் மூலம் பூச்சி நோய் தாக்குதலைக் குறைக்கலாம்.(உதாரணம்): நெல் குலைநோய்,நெல் புகையான்.• நல்ல தரமுள்ள பூச்சி மற்றும் நோய் தாக்காத விதைகளை விதைப்பதன் மூலம் [...]

August 24, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

இயற்பியல் முறை: பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்

• பூச்சிகள் 60-660c வெப்பநிலையில் கொல்லப்படுகின்றன.இம்முறையைப் பயன்படுத்தி சேமிப்பு தானிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
• வெப்ப நீரில் (520c) நெல் விதைகளை 10 நிமிடங்கள் வரை ஊற வைப்பதன் மூலம் விதை மூலம் பரவும் இலைப்புள்ளி நோயின் காரணிகளைப் கட்டுப்படுத்தலாம்.
• நெல் விதைகளை 500c முதல் 550c வெப்பநிலையில் 15 நிமிடம் வரை சிகிச்சைக்கு உட்படுத்துவதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
• அதிக சூரிய வெப்பத்தில் கோதுமை விதைகளை காய வைப்பதன் மூலம் கரிப்பூட்டை நோயின் பூசணத்தைக் கட்டுப்படுத்தலாம்.
• எறும்புகள் ஏறுவதைக் தடை செய்ய தண்ணீர்த் தடை ஏற்படுத்தலாம்.
• பயிர் [...]

August 24, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

நெல் பயிரைத் தாக்கும் துங்ரோ நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

நெல் பயிரைத் தாக்கும்  நோய்களுள் முக்கியமானது நெல் துங்ரோ நச்சுக்யிரி நோய் பச்சை தத்த்துப் பூச்சியினால் பரப்பப்படுகிறது.    குஞ்சுகள் மற்றும் முழு வளர்ச்சியடைந்த  பூச்சிகள் இலைகளின் மையப்பகுதியிலிருந்து ஓர்ங்க்ளை நோக்கி சாறை உறிஞ்சுகின்றன.
நோயின் அறிகுறிகள்: பயிர்கள் வளர்ச்சி குன்றியும், வீரியம் குறைந்தும், குட்டையாகவும் இருக்கும்.  பச்சை தத்துப்பூச்சிகள் இலைகளின் சாறினை உறிஞ்சுவதால் தூர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும்.  இலையின் நுனி மஞ்சள் நிறமாக மாறி பின் கீழ் நோக்கிப் பரவ ஆரம்பிக்கும்.  பயிரின் மேல் பகுதியில் உள்ள [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

நெற் பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க இயற்கை மருந்து!

பஞ்ச காவ்யா:-
பசு பால் மட்டும் தரவில்லை.  பசுவின் கழிவுகள் இதுவரை உரமாகப் பயன்பட்டன்.  ஆனால் பசுவிலிருந்து பெறப்படும் பசுஞ்சாணம், மூத்திரம்.  பால், தயிர், நெய், ஆகிய 5 பொருள்களும் கலந்த பஞ்சகாவ்யம் பல ஆண்டுகளாக சிவன்கோவில்களில் சிவராத்தியன்று பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டது.  அன்று இதனை வந்த நோய்போக்கும் வரும் நோயை தடுக்கும்” என்ற எண்ணத்தில் எல்லோர்க்கும் கொடுத்தனர். அது இப்போது பஞ்சகாவ்யா என்றும் ஆவூட்டம் என்றும் பரவலாக பல இடங்களில் பயிர்கட்கும், கால்நடைகட்கும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.  பயிருக்கு [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்


Powered By Indic IME