Archive for the ‘கால்நடை வளர்ப்பு’ Category

ஆடுகளை தேர்வு செய்தல்

ஆடுகளை நாம் கறிக்காக வளர்ப்பதால் நல்ல ஆரோக்கியமான வளமான ஆடுகளையே வாங்கி வளர்க்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ற ஆடுகளை வாங்கி வளர்க்கலாம். சினை ஆடுகளாக வாங்கினால் நாம் வாங்கியவுடன் அவற்றிலிருந்து குட்டிகளை பெறலாம். பெட்டை ஆடுகளை வாங்கும் பொழுது அவை 1 வருடம் நிரம்பியவைகளாக வாங்க வேண்டும். இளம் குட்டிகளாக வாங்கும் பொழுது 3 மாதத்திற்கு மேலான வளமான குட்டிகளை வாங்கி வளர்க்கலாம். 20 பெட்டை ஆடுகளுக்கு 1 கிடா என்ற விகிதத்தில் ஆடுகளை வளர்க்க [...]

May 2, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: ஆடு

வெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்

மாடுகள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. அவைகளுக்கு வரும் நோய்களை தொற்று நோய், தொற்றாத நோய் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.
தொற்று நோய் என்பது நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் இருந்து காற்று,தண்ணீர்,நேரிடைத் தொடர்பு, அல்லது மற்ற தொடர்புகள் மூலமாக இதர கால்நடைகளுக்கும் எளிதாகப் பரவும் நோயாகும். கால்நடைகளுக்கு வரும் வெக்கை நோய்,தொண்டை அடைப்பான்,கோமாரி (கால்கட்டு, வாய்ச் சப்பை) அம்மை நோய், சப்பை நோய் போன்ற நோய்கள் இந்த வகையைச் சேர்ந்தது.
ஒரு குறிப்பிட்ட மாட்டிற்கு மட்டும் நோய் வந்து அதன் அருகில் [...]

April 25, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: பசு

சித்தரை பட்டத்தில் எள், உளுந்து

சித்தரை பட்டத்தில் எள், உளுந்து பயிரிடலாம்
உளுந்து பயிரிட ஏற்ற தருணம். ஆடுதுறை 5 உளுந்து ரகத்தை பயிரிடலாம். உளுந்து தண்ணீர் காட்ட வேண்டுமே தவிரக் கட்டக் கூடாது. தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரெயின்கண், தெளிப்பு நீர் பாசன கருவி போன்றவற்றை வழங்கி வருகிறது.
 
இந்தக் கருவிகளை நிலத்தில் இரு இடத்தில் பொருத்தினால் அவைகள் சுற்றி, சுற்றி வந்து தண்ணீரை நிலத்தில் பீய்ச்சி அடிக்கும். இதனால் பயிருக்கு தேவையான தண்ணீர் மட்டுமே கிடைக்கும்.
மேலும் [...]

April 7, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: கால்நடை வளர்ப்பு

கால்நடைகளுக்கு காப்பிட்டு

கால்நடைகளுக்கு காப்பிட்டு திட்டம்:
கால்நடைகளுக்கு அரசு மானியத்துடனான கால்நடை காப்பீட்டுத் திட்டம் அரசு கால்நடை மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. கால்நடைகளுக்கு காப்பீடு செய்வது பற்றிய விபரங்கள் தேவைப்படும் விவசாயிகள் திருப்பழனம் அரசு கால்நடை மருத்துவமனையினை அணுகவும் என இளநிலை கால்நடை உதவி மருத்துவர். டாக்டர். அருண் தெரிவிக்கிறார்.
மேலும் கால்நடை காப்பீட்டுத்திட்டத்தில் பங்கு பெற கீழ்கண்ட கிராமத்தில் கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். திருப்பழனம், விளாங்குடி, தெனஞ்சேரி, ஒக்கக்குடி, செம்மங்குடி, பெரமூர், சுயம்பாட்சநல்லூர், காருகுடி, இராயம் பேட்டை.
மேலும் மற்ற கிராமங்களில் [...]

April 7, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: கால்நடை வளர்ப்பு

அசோலா – சிறந்த கால்நடை தீவனம்

அசோலா நீர் நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணி வகையினைச் சார்ந்தது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச் சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தி உற்பத்திச் செலவினைக் கணிசமாக குறைக்க முடியும் என்பதை உழவர் பெருமக்கள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர்.
அசோலாவிலுள்ள சத்துக்கள் :
அசோலாவில் 25- 30 விழுக்காடு புரதச்சத்து, 14-15 விழுக்காடு நார்ச்சத்து, சுமார் 3 விழுக்காடு கொழுப்புச் சத்து, 45- 50 விழுக்காடு [...]

March 31, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: தீவனப்பயிர்கள்

கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர்

“நீரின்றி அமையாது உலகு” – வள்ளுவர் வாக்கு.  எந்த உயிரினமானாலும் நீரின்றி வாழ இயலாது.  கால்நடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கன்று.  உயிரினங்கள் உயிர் வாழ காற்றும் உணவும் எவ்வளவு அவசியமோ, நீரும் அவ்வளவு அவசியமே.  உணவின்றி கால்நடைகள் ஒரு மாதம் கூட உயிர் வாழ இயலும்.  ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது அரிது.
தண்ணீரின் அவசியம்:

கறவை மாடுகளின் உடல் எடையில் 70% நீரும், பாலில் 87% நீரும் உள்ளது.  உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் நீர் [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: கால்நடை வளர்ப்பு

நச்சுத் தாவரங்கள்

பயனுள்ள பசுந்தழைகள் குறித்து எழுதும்போது, நச்சுத் தாவரங்கள் சில குறித்தும் தெரிவிப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.
அரளி (Nerium oleander)
தமிழ்நாடு எங்கும் உள்ள இது மிகக் கொடிய நச்சுத் தாவரம். ஆனால் பல வண்ணங்களில் பூக்கும் பல வகைகள் உண்டு. அடுக்கு அரளி, ரோசாப்பூ போன்று அழகாகப் பூக்கும். பலர் வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பார்கள். ஆனால் அரளி எவ்வளவு நச்சுத் தன்மை கொண்டது என்றால் 5 கிராம் காய்ந்த தழை ஒரு மாட்டையே கொல்லவல்லது.
அரளியை ஆடு சாப்பிடுமா? [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: வெள்ளாடு

புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்

வெள்ளாடுகளுக்கு ஏற்ற புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்
வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் மொச்சையினப் பயிர்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது. ஆகவே, இவை குறித்தும் விவாதிக்கலாம். இது குறித்து அலமாதி தீவன உற்பத்தி நிலைய விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

கோ- 1 கலப்பின நேப்பியர் புல் நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் [...]

March 30, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: வெள்ளாடு

இறைச்சி, பால் உற்பத்திக்குத் தீவனம் அளித்தல்

இறைச்சி உற்பத்திக்குத் தீவனம் அளித்தல்
வெள்ளாடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. சிலர் ஓரிரு கடாக் குட்டிகனை வாங்கி வளர்த்து, விற்பனை செய்வர். படித்த பட்டதாரிகள், பல கடாக்களை வளர்த்து நிறைந்த வருவாய் பெற வாய்ப்புள்ளது. வெள்ளாடுகள் விரைவில் எடைகூடும்படி தீவனம் அளிக்கப்பட வேண்டும். அப்படியானால்தான் வளர்ப்போருக்கு அதிக ஆதாயம் கிடைப்பதுடன், இறைச்சியும் மிருதுவாக இருக்கும். வெள்ளாட்டுக் குட்டிகளின் வளர்ச்சி வீதம் 3 மாதம் முதல் 6 மாதம் வரை அதிகமாக இருக்கும். ஆகவே, 6 மாத வயதில் ஆட்டுக்கடாக்கள் நல்ல [...]

March 27, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: வெள்ளாடு

தீவனத் தேவை

வெள்ளாடுகளுக்கு எவ்வளவு தீவனம் தேவை
வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் என்று குறிப்பிட்டேன். நமது பகுதி ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன. (பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும்.
ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.
காய்வு நிலையில்
பசுந்தழை / [...]

March 27, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: வெள்ளாடு


Powered By Indic IME